ஆபரேஷன் கங்கா | 3 விமானங்களில் 43 தமிழக மாணவர்கள் உட்பட 550 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய சுமார் 550 இந்தியர்களுடன் இன்று மூன்று விமானங்கள் நண்பகலில் மும்பை மற்றும் டெல்லிக்கு வந்தடைந்தன. இதில் வந்த 43 தமிழக மாணவர்களை டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசு இல்லத்தின் முதன்மை உள்ளுரை ஆணையர் அதுல்ய மிஸ்ரா காத்திருந்து வரவேற்றனர். ரஷ்யாவால் நிகழ்ந்த போர் காரணமாக உக்ரைனில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதனால், அவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வருவதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ மீட்பு நடவடிக்கை அமலாகி உள்ளது. இந்த … Read more

உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி? – வெளியானது தகவல்!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் … Read more

ஆந்திரா : தீ விபத்தில் சிக்கி கொளுந்து விட்டு எரிந்த பேருந்துகள் <!– ஆந்திரா : தீ விபத்தில் சிக்கி கொளுந்து விட்டு எரிந்த பேரு… –>

ஆந்திர மாநிலத்தில் மரக்கடை குடோனில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியதால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 9 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன. பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மரக்கடை குடோன் அருகே இருந்த மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. மதியம் மரக்கடை குடோனில் திடீரென ஏற்பட்ட தீ, அங்கிருந்த பேருந்துகள் மீது வேகமாகப் பரவத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கொளுந்து விட்டு எரிந்த பேருந்துகளால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் 9 பேருந்துகள் … Read more

இந்திய மாணவர் பலி எதிரொலி: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை

உக்ரைன் கார்கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்கிற மாணவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைப்பெற உள்ளது. உக்ரைன் ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையும் படியுங்கள்.. உணவு பொருட்கள் வாங்க கடையில் … Read more

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன்: பெற்றோரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி: உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீனின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார். உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக உக்கிரமாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர … Read more

உக்ரைனிலிருந்து கேரளா திரும்பிய 36 மாணவர்கள்

கேரளாவைச் சேர்ந்த 36 மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நேற்று (திங்கட்கிழமை) மாலை உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்த 36 மாணவர்களில் 25 பேர் கொச்சிக்கும், 11 பேர் திருவனந்தபுரத்திற்கும் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தலைநகர் கிவ்வை விட்டு உடனே வெளியேறுமாறும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் இன்று கிவ்வை விட்டு வெளியேறுமாறும் இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையும் … Read more

‘‘எனக்கு வேண்டாம் இந்த பதவி’’- ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி இல்கர் ஐசி திடீர் மறுப்பு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட இல்கர் ஐசி, திடீரென அந்த பதவி வேண்டாம் என மறுத்துள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் … Read more

உக்ரைன் போரில் இந்திய மாணவர் பலி: ராகுல் காந்தி வேதனை!

ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்து உள்ளார். உக்ரைன் நாட்டில், ரஷ்யப் படைகள் கடந்த ஆறு நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்யப் படைகள், அரசு கட்டடங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை நோக்கி குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு தங்களால் முடிந்தவரை உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் கொடுத்து வருகின்றன. … Read more

இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம் : ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் <!– இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம் : ரஷ்யா, உக்ரைன் தூதர்… –>

ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் இந்திய மாணவர் கொல்லப்பட்ட நிலையில் சம்மன் ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய மாணவர் கொல்லப்பட்டார் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்குச் சம்மன் ரஷ்யா, உக்ரைன் தூதர்களை இன்று பகலில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் அறிவுறுத்தல் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ரஷ்யா, உக்ரைனிடம், இந்தியா வலியுறுத்தியிருந்தது … Read more

கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் அதிகரிப்பு- பிப்ரவரில் ரூ.1.33 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூலில் ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலாகி உள்ளது. இருப்பினும் இது முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாத வசூலை விட 18 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது: ஜனவரி … Read more