இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம் : ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் <!– இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம் : ரஷ்யா, உக்ரைன் தூதர்… –>

ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் இந்திய மாணவர் கொல்லப்பட்ட நிலையில் சம்மன் ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய மாணவர் கொல்லப்பட்டார் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்குச் சம்மன் ரஷ்யா, உக்ரைன் தூதர்களை இன்று பகலில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் அறிவுறுத்தல் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ரஷ்யா, உக்ரைனிடம், இந்தியா வலியுறுத்தியிருந்தது … Read more

கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் அதிகரிப்பு- பிப்ரவரில் ரூ.1.33 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூலில் ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலாகி உள்ளது. இருப்பினும் இது முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாத வசூலை விட 18 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது: ஜனவரி … Read more

டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு சம்மன் அனுப்பியது ஒன்றிய அரசு

டெல்லி: டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு ஒன்றிய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி மார்ச் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 105 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் 19 கிலோ சிலிண்டர் விலை 2,145 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள் விலை தொடர்ந்து 915 ரூபாய் ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

மின்னொளியில் ஜொலிக்கும் காளஹஸ்தி

திருப்பதி: பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் தற்போது பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகவும், ராகு – கேது பரிகார தலமாகவும் காளஹஸ்தி சிவன் கோயில் விளங்குகிறது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் வகையில், இந்த திருத்தலத்தில்தான் சிவன் கோயிலுக்கு அருகே மலை மீது உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில் கடந்த 24-ம் தேதி கொடியேற்றம் … Read more

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் , தங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கோரி, கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கவுரவ ஊதியமாக 25 ஆயிரம் ரூபாய்; உதவியாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை … Read more

மகாசிவராத்திரி கோலாகலம் : சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் <!– மகாசிவராத்திரி கோலாகலம் : சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள்… –>

மகாசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டுச் சென்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷம்பு மகாதேவ் கோவிலில் மகா சிவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காளேஷ்வர் கோவிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல, உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் மூன்று நதிகள் சங்கமிக்கும் … Read more

ஆரோக்கிய வனத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்கிய வனம் மனித வடிவில் யோகா முத்திரையில் அமர்ந்து இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகளும், தாவரங்களையும் கொண்டுள்ளது. மேலும், ஆரோக்கிய வனத்தில் நீருற்றுகள், யோகா மேடை, நீர் கால்வாய், தாமரை குளம் மற்றும் காணும் இடம் உள்ளிட்டவையும் … Read more

உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு.: வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீன் இறந்துள்ளார். கார்கிவ் நகரிலிருந்து வெளியே ரயில் நிலையத்திற்கு செல்லும்போது குண்டுவீச்சு தாக்குதலில் மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மகா சிவராத்திரி: 6 மணி நேரத்தில் 23436 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிற்பத்தை வடித்த சிற்பி

ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் சிவன் ஆலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவதும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று (01/03/2022) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் சிவபெருமானின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.  View this post on Instagram A post shared by Sudarsan pattnaik … Read more