உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு.: வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீன் இறந்துள்ளார். கார்கிவ் நகரிலிருந்து வெளியே ரயில் நிலையத்திற்கு செல்லும்போது குண்டுவீச்சு தாக்குதலில் மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மகா சிவராத்திரி: 6 மணி நேரத்தில் 23436 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிற்பத்தை வடித்த சிற்பி

ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் சிவன் ஆலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவதும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று (01/03/2022) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் சிவபெருமானின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.  View this post on Instagram A post shared by Sudarsan pattnaik … Read more

சர்வதேச விமான சேவைக்கு மறு உத்தரவு வரை தடை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. பிப்ரவரி 28-ம் தேதி (நேற்று) வரைஏற்கெனவே தடை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், அவசர கால விமானங்கள் சில நாடுகளுக்கு இயக்கப்பட்டன. மேலும் சரக்கு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச பயணிகள் … Read more

உக்ரைன் – ரஷ்யா போர்: இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானம்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் கீவ்-யை குறித்து வைத்து ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. மேலும், சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைபற்றியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், … Read more

ஆபரேஷன் கங்கா திட்டம் – இந்தியர்களை மீட்க ஹங்கேரி புறப்பட்டார் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.   இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  அப்போது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த … Read more

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் மகன் உயிரிழப்பு: நிறுவன ஊழியர்கள் இரங்கல்..!!

மும்பை: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் 26 வயதான மகன் ஜைன் நாதெள்ளா திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெள்ளா இருந்து வருகிறார். இவருக்கு ஜைன் நாதெள்ளா என்ற மகன் இருந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்டின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா மகன் ஜைன் … Read more

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி இல்லை: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறைக்கு வந்தது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் … Read more

அங்கே "டமால் டுமீல்".. இங்கே "டும் டும் டும்".. உக்ரைன் பெண்ணை மணந்த ஹைதராபாத் பையன்!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் அனல் பறக்க யுத்தம் நடந்து கொண்டுள்ள நிலையில், அந்த நாட்டுப் பெண்ணை மணம் முடித்து கையோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை. பல காதல்களால் போர்கள் மூண்டதையும் வரலாறு பார்த்துள்ளது. பல போர்களை காதல் நிறுத்தியதையும் பார்த்துள்ளது. அன்பை விட பெரிய ஆயுதம் ஏதேனும் இருக்க முடியுமா.. அப்படிப்பட்ட அன்பின் அடித்தளத்துடன் உருவான ஒரு இரு நாட்டு காதல் திருமணமாக சுப முடிவைக் கண்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான திருமணம். வழக்கமான … Read more

இந்தியாவில் புதிதாக 6,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 6,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், புதிதாக 6 ஆயிரத்து 915 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது நாடு முழுவதும் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. Source link

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனுக்குச் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், 5 மாநில தேர்தல் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதையும் படியுங்கள்…இந்தியாவில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு