ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனுக்குச் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், 5 மாநில தேர்தல் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதையும் படியுங்கள்…இந்தியாவில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா உயிரிழப்பு

மும்பை: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா(26) உயிரிழந்தார். பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் ஜெயின் நாதெல்லா காலமானார்.

மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் உக்ரைன் செல்வது ஏன்? – தீர்வு குறித்து கல்வியாளர்கள் கருத்து

ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போரில் ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ படிப்புக்காகச் சென்றவர்கள். உக்ரைன் கல்வித்துறை கணக்கின்படி, 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு படிப்பதாகக் கூறப்பட் டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உக்ரைனில் படிக்கும் மாணவர்களில் 24 சதவீதம் பேர்இந்திய மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பஞ்சாப், டில்லி, ஹரியாணா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் … Read more

ஆப்பரேஷன் கங்கா: டெல்லி புறப்பட்டது 9ஆவது விமானம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. … Read more

இந்தியாவில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 92,472 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய பாசிட்டிவ் ரேட் .77 சதவீதம் ஆகும். 180 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,14,023 ஆக உயர்ந்துள்ளது.   இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 4.23 … Read more

“தோழர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' செயல்படுவது எப்படி? – ஒரு பார்வை

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர், உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர். உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு … Read more

மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது <!– மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்… –>

மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தேர்தலில் 173 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநில கவர்னர் இல.கணேசன் Tamphasana பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது … Read more

புகாரெஸ்டில் இருந்து 218 இந்தியர்களுடன் டெல்லி புறப்பட்டது 9-வது விமானம்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கையால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் … Read more

உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் ஆபரேஷன் கங்காவின் 8 மற்றும் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது

ஹெங்கேரி: ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன் 8வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவித்த 218 பேருடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.