உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் ஆபரேஷன் கங்காவின் 8 மற்றும் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது

ஹெங்கேரி: ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன் 8வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவித்த 218 பேருடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.

உக்ரைனில் இருந்து 1,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்: 23 மாணவ, மாணவிகள் தமிழகம் வந்து சேர்ந்தனர்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை தொடங்கியது. முதல் கட்டமாக உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இருந்து நேற்று முன்தினம், ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் வந்த இந்தியர்களை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் புக்வேனியன் … Read more

இந்தியாவில் புதிதாக 8,013 பேருக்கு கொரோனா பாதிப்பு <!– இந்தியாவில் புதிதாக 8,013 பேருக்கு கொரோனா பாதிப்பு –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து, 8 ஆயிரத்து 13 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 119 பேர் உயிரிழந்த நிலையில், 16 ஆயிரத்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 11 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 601 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவும் அண்டை நாடுகள் – பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

புதுடெல்லி: போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், மீட்டு, தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவி வருகின்றன. இந்நிலையில், இந்தியர்களுக்கு உதவி செய்யும் உக்ரைனை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ருமேனியா பிரதமர்  நிக்கோலே சியூகாவுடன் தொலைபேசி மூலம் … Read more

பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாலியல் தொழிலாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாக்காளர் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களும் வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்படிருந்தது.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுக்க வேண்டும். … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் – உக்ரைன் நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் என அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் உக்ரைனில் … Read more

மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்புப் போராட்டம் – பல இடங்களில் முடங்கிய போக்குவரத்து <!– மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்புப் போராட்டம் – பல இடங்… –>

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து பாஜகவினர் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கிள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலந் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. பீர்பூம், சிலிக்குரி, ஹூக்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில்கள் செல்வது தாமதமானது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு … Read more

சமாஜ்வாடி பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் – 7 பேர் மீது வழக்குப் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 6 ஆம் கட்ட தேர்தல் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற சமாஜ்வாடி கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பபட்டதாக புகார் எழுந்தது. அந்த பிரச்சார கூட்டத்தின் வீடியோவை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   அது சமாஜ்வாடி கூட்டம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் வீடியோவில் இருக்கும் வேட்பாளர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை … Read more

செபி தலைவராக மாதாபி நியமனம்

புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் (செபி) தலைவராக, அதன் முன்னாள் முழு நேர உறுப்பினர் மாதாபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த அஜய் தியாகியின் 5 ஆண்டு கால பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. செபி தலைவராக 3 ஆண்டு காலத்துக்கு அவர் 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2020 வரை 6 மாதங்கள் பதவி … Read more

குஜராத்: 10,000+ நபர்களை குட்கா, சிகரெட் பழக்கத்திலிருந்து மீட்ட மருந்தாளுநர்!

குஜராத்தில் புகையிலை, குட்கா, பான், பீடி, சிகரெட் பிடித்தல் போன்ற பழக்கத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை மீட்டுள்ளார் ஒரு மருந்தாளுநர். குஜராத் மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் படேல் (51). படானிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். குஜராத்தில் ஆண்கள், பெண்கள் இருவரும் அதிக அளவில் புகையிலை, பான், குட்கா போன்ற பழக்கத்துக்கு ஆளானவர்கள். இதையறிந்த நரேஷ், அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான போராட்டத்தை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கினார். … Read more