சமாஜ்வாடி பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் – 7 பேர் மீது வழக்குப் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 6 ஆம் கட்ட தேர்தல் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற சமாஜ்வாடி கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பபட்டதாக புகார் எழுந்தது. அந்த பிரச்சார கூட்டத்தின் வீடியோவை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   அது சமாஜ்வாடி கூட்டம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் வீடியோவில் இருக்கும் வேட்பாளர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை … Read more

செபி தலைவராக மாதாபி நியமனம்

புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் (செபி) தலைவராக, அதன் முன்னாள் முழு நேர உறுப்பினர் மாதாபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த அஜய் தியாகியின் 5 ஆண்டு கால பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. செபி தலைவராக 3 ஆண்டு காலத்துக்கு அவர் 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2020 வரை 6 மாதங்கள் பதவி … Read more

குஜராத்: 10,000+ நபர்களை குட்கா, சிகரெட் பழக்கத்திலிருந்து மீட்ட மருந்தாளுநர்!

குஜராத்தில் புகையிலை, குட்கா, பான், பீடி, சிகரெட் பிடித்தல் போன்ற பழக்கத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை மீட்டுள்ளார் ஒரு மருந்தாளுநர். குஜராத் மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் படேல் (51). படானிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். குஜராத்தில் ஆண்கள், பெண்கள் இருவரும் அதிக அளவில் புகையிலை, பான், குட்கா போன்ற பழக்கத்துக்கு ஆளானவர்கள். இதையறிந்த நரேஷ், அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான போராட்டத்தை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கினார். … Read more

சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில், கடுங்குளிரிலும் பயிற்சியில் ஈடுபடும் இந்திய படையினர் <!– சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில், கடுங்குளிரிலும் பயிற்… –>

உத்தரக்கண்டில் சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் உள்ள இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வாலிபால் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது. இமயமலையில் கடல்மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரமுள்ள பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரில் தரையெங்கும் பனி உறைந்துள்ள இடத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஹங்கேரியில் இருந்து 6வது சிறப்பு விமானம் மூலம் 240 இந்தியர்கள் டெல்லி வந்தனர்

புதுடெல்லி: உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தது.  இதேபோல்  240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து ஆறாவது விமானம் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தது.  விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானத்திற்குள் … Read more

கான்பூர் ஐஐடி ஆய்வில் தகவல் கொரோனா 4ம் அலை ஜூன் மாதம் ஏற்படும்

புதுடெல்லி: கொரோனா 4வது அலை ஜூன் 22ல் தொடங்கி, ஆகஸ்ட் இறுதியில் உச்சத்தை எட்டும் என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களின் மாதிரி ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பரவல் குறித்து புள்ளியியல் அடிப்படையில், கான்பூர் ஐஐடி.யின் கணிதம், புள்ளியியல் துறை மாணவர்கள், கடந்த 4 மாதங்களாக நடத்திய மாதிரி ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாதிரி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று ஜனவரி 30, 2020ம் ஆண்டில் இருந்து பரவத் தொடங்கியது. அந்த கணக்கின்படி, 936 நாட்களுக்கு … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்: 'படையெடுப்பு' வார்த்தையை தவிர்த்த காங்கிரஸ்; உரக்கச் சொன்ன சசிதரூர்

புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டுவிதமான நிலைப்பாடுகள் வெளிப்பட்டுள்ளது விவாதத்துக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. உக்ரைனில் இருந்து போலந்துக்கு செல்லும் இந்தியர்கள் சிலர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உக்ரைனில் இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், இந்தக் காணொளிகளைப் பார்க்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் என் மனம் நோகிறது. எந்தப் பெற்றோருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது. … Read more

மீட்புப் பணியை ஒருங்கிணைக்கச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்..! <!– மீட்புப் பணியை ஒருங்கிணைக்கச் செல்லும் 4 மத்திய அமைச்சர்க… –>

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டுத் தாயகத்துக்கு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர்கள் 4 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சிறப்புத் தூதர்களாகச் செல்ல உள்ளனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்களும், … Read more

பருப்பு வகைகள் இறக்குமதி செய்யும் கால அளவு நீட்டிப்பு – விலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அத்தியாவசிய உணவு  பொருட்கள் பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்க, அதன் வரத்து அதிகரிப்பதையும், விலைகளை நிலைப்படுத்தவும் மத்திய அரசு பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அத்தியாவசியப் உணவுப்  பொருட்கள் சட்டத்தின் கீழ், விலைகளைக்  கண்காணிக்கும்படியும், மில் உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இருப்புகளை தெரிவிப்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு  மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவுறுத்தி இருந்தது. துவரை, உளுந்து மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை  கடந்தாண்டு மே 15ம் தேதி … Read more

இரட்டை மடிப்பு வலை விவகாரம் ஆறு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இரட்டை மடிப்பு வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆறு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசு தடை விதித்தாலும், பின்னர் கடந்த 2014ம் ஆண்டு இரட்டை மடிப்பு வலைகளை பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளோடு கூடிய அனுமதியை வழங்கியது. இரட்டை மடிப்பு வலையை … Read more