பருப்பு வகைகள் இறக்குமதி செய்யும் கால அளவு நீட்டிப்பு – விலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அத்தியாவசிய உணவு  பொருட்கள் பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்க, அதன் வரத்து அதிகரிப்பதையும், விலைகளை நிலைப்படுத்தவும் மத்திய அரசு பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அத்தியாவசியப் உணவுப்  பொருட்கள் சட்டத்தின் கீழ், விலைகளைக்  கண்காணிக்கும்படியும், மில் உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இருப்புகளை தெரிவிப்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு  மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவுறுத்தி இருந்தது. துவரை, உளுந்து மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை  கடந்தாண்டு மே 15ம் தேதி … Read more

இரட்டை மடிப்பு வலை விவகாரம் ஆறு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இரட்டை மடிப்பு வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆறு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசு தடை விதித்தாலும், பின்னர் கடந்த 2014ம் ஆண்டு இரட்டை மடிப்பு வலைகளை பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளோடு கூடிய அனுமதியை வழங்கியது. இரட்டை மடிப்பு வலையை … Read more

பிரசாந்த் கிஷோரை சந்தித்த தெலுங்கானா முதல்வர் கேசிஆர்

ஹைதராபாத்: ஐபேக் நிறுவனர் மற்றும் பிரபல தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து ஆலோசனை நடத்தியுள்ளார். 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும். இதன்தொடர்ச்சியாக, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள், முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் சந்திரசேகர் … Read more

உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு <!– உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு –>

உக்ரைன் -ரஷ்யா விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மமதா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், இது போன்ற சர்வதேச நெருக்கடி சமயங்களில் உள்நாட்டு கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேசமாக ஒன்றிணைந்து நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா சர்வதேச அமைதியை விரும்புவதாகவும், எல்லை தாண்டிய படையெடுப்பை நிராகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மமதா, தற்போதைய … Read more

உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் நாளை அனுப்பப்படும்- பிரதமர் மோடி

புதுடெல்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.  எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்தவண்ணம் உள்ளனர். அதேசமயம், பல்வேறு மாணவர்கள், சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் … Read more

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்ய தயார்.! ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படும். உக்ரைனில்  போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உக்ரைன்-ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி உள்ளன. இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைனுக்கு  மனிதாபிமான … Read more

உக்ரைனில் இருந்து வந்த 6-வது சிறப்பு விமானம்: 21 தமிழக மாணவர்கள் உட்பட 280 பேர் மீட்பு

புதுடெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு கிளம்பிய ஆறாவது சிறப்பு விமானம் இன்று மாலை 6.00 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. இதில், 21 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 280 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் நாட்டில் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதையடுத்து இந்தியா உள்ளிட்டப் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து கல்வி உள்ளிட்ட பல காரணங்களால் உக்ரைனில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். இந்திய மாணவர்கள் அனைவரும் மத்திய அரசின் உதவியால், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த … Read more

நான் சாகணும்னு சிலர் பூஜை செய்றாங்க… பிரதமர் மோடி பகீர் தகவல்!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து, மார்ச் 3 ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “`நான் மரணிக்க வேண்டும் எனறு எதிரிகள் சிலர் வாரணாசியில் சிறப்புப் பூஜைகள் நடத்துகின்றனர். இந்த செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அரசியலில் சிலர் எப்படியெல்லாம் தரம் தாழ்ந்து … Read more

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வியாபாரியிடம் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்ற இளைஞர்களின் சிசிடிவி <!– சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வியாபாரியிடம் செல்போனை … –>

புதுச்சேரியில், சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த வியாபாரியிடம் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 24ஆம் தேதி பணி நிமித்தமாக வந்த வடமாநில வியாபாரி, மிஷன் வீதியில் சாலையில் நள்ளிரவு தூங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக 2 சக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள் ஒருவன், வியாபாரியின் மேல்பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிவிட்டு தப்பிச் சென்றான். இதனை சுதாரித்த வியாபாரி, இளைஞர்களை துரத்தி சென்றபோதும் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.  இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் … Read more

14-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை- போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் இப்ராகிம். ஜார்ஜ் ஆபிரகாமின் மகள் ரேஷ்மா ஆன் ஆபிரகாம். டாக்டரான இவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணி புரிந்து வந்தார். இதற்காக அவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் வசித்து வந்தார். டாக்டர் ரேஷ்மா ஆன் ஆபிரகாம் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற ரேஷ்மா ஆன் ஆபிரகாம், திடீரென 14-வது … Read more