14-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை- போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் இப்ராகிம். ஜார்ஜ் ஆபிரகாமின் மகள் ரேஷ்மா ஆன் ஆபிரகாம். டாக்டரான இவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணி புரிந்து வந்தார். இதற்காக அவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் வசித்து வந்தார். டாக்டர் ரேஷ்மா ஆன் ஆபிரகாம் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற ரேஷ்மா ஆன் ஆபிரகாம், திடீரென 14-வது … Read more

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பீர் மதுபானத்தின் விலை உயரும் சூழல் – ஏன் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக இந்தியாவில் பீர் மதுபானத்தின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பீர் தயாரிக்கும் மூலப்பொருள்களான பார்லி உள்ளிட்டவை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து இந்தியா உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே பார்லி உள்ளிட்ட மூலப் பொருள்களின் உற்பத்தி இருந்தாலும் சர்வதேச சந்தையில் அவற்றின் விலை உயரும் போது அதன் தாக்கம் இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் விலை ஏற்றம் குறித்து மாநில அரசும், உற்பத்தியாளர்களுமே கலந்தாலோசித்து முடிவு … Read more

‘‘மாணவர்களை மீட்பது உங்களுக்கு முக்கியம்; போரை நிறுத்துவது எங்களுக்கு முக்கியம்’’- உக்ரைன் தூதர் ஆதங்கம்

புதுடெல்லி: மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது, அதேசமயம் போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா டெல்லியில் இன்று … Read more

நமது சொந்த மக்களை நாம் கைவிட்டு விடக் கூடாது: ராகு காந்தி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை குறி வைத்து பல்முனைத் தாக்குதலை வீரர்கள் நடத்தி வருகின்றனர். இதனிடையே, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைன் தனது வான் எல்லையை மூடிய நிலையில், அதன் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அண்டை நாட்டு எல்லைகளுக்கு … Read more

கீவ்வில் இருக்கும் இந்திய மாணவர்கள் மேற்கு பகுதிகளுக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தல் <!– கீவ்வில் இருக்கும் இந்திய மாணவர்கள் மேற்கு பகுதிகளுக்கு ச… –>

உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நீக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குப்பகுதிகளுக்கு செல்லுமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்குப்பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளாக இருப்பதாகவும், அங்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுபாடின்றி கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் போர்ப்பதற்றம் மிகுந்து காணப்படும் கீவ்வில் உள்ள இந்திய மாணவர்கள் இலவச சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குப்பகுதிகளுக்கு செல்லுமாறு அந்நகரில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் … Read more

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு- பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான ஜாலிமத் கிராமத்தில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மற்றும் மண் குவியல்கள், பல நூறு மீட்டர்கள் ஆழத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றின் கரையில் சரிந்தது. இதனால் அப்பகுதியில் புழுதி மண்டலமாக காட்சியளித்தது. இதில் கிராம மக்களின் ஏராளமான மாட்டுக் கொட்டகைகள் மற்றும் கழிப்பறைகள் இடிந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக்கொண்டு 6-வது விமானம் டெல்லி வந்தது

டெல்லி: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக்கொண்டு 6-வது விமானம் டெல்லி வந்துள்ளது. 240 மாணவர்களுடன் 6-வது விமானம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.

“யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை” – நிர்மலா சீதாராமன் உரை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விளக்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன் பேசியதன் தொகுப்பு: யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை. ஒரு Engine-க்கு Lubricant Oil போலத்தான், அரசுக்கு வரிப்பணமும். எங்கு செல்கிறது ? யாருக்கு செல்கிறது? என்பதை விட அதனால் அரசு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பது தான் முக்கியம். முந்தைய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு … Read more

உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு வாக்கு கேட்ட பாஜக எம்.பி.

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு பாஜக எம்.பி. வாக்கு கேட்பது நிகழ்கிறது. இதற்கு சமாஜ்வாதியில் போட்டியிடும் சுவாமி பிரசாத் மவுரியா, பாஜக எம்.பி.யான சங்கமித்ரா மவுரியா இருப்பது காரணமாகி விட்டது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) முக்கியத் தலைவராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகக் கருதப்படும் மவுரியாவை மாயாவதி கடந்த தேர்தலுக்கு முன்பாக கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து பாஜகவின் வேட்பாளராக 2017 தேர்தலில் போட்டியிட்டு குஷிநகர் மாவட்ட … Read more