கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ .1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்படும் – பிரதமர் அறிவிப்பு <!– கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ .1 … –>

கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், அரசின் பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புத் திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றைப் பிஎம் கதிசக்தி ஒருங்கிணைக்கும் எனத் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையம், நீர்வழிகள், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை அரசு அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாகக் கிடைக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற துறைகளின் பொருளாதார உற்பத்தித் … Read more

ஒடிசாவில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்: பா.ஜனதா-காங்கிரஸ் படுதோல்வி

ஒடிசா மாநிலத்தில் 5 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 78.68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இதில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 786 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. … Read more

இந்தியர்களை மீட்கும் பணி; உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள்.! பட்டியல் வெளியீடு

டெல்லி: உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் காரணமாக,அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.இதனால்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க வேண்டும் என டெல்லியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில்,மாணவர்களை … Read more

உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி: பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமரின் கதி சக்தி திட்டம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் எனக் கூறினார். தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும், அது விலை மலிவாக … Read more

‘‘உக்ரைனில் இந்தியர்கள் மீது தாக்குதல்; சொந்த மக்களை கைவிட முடியாது’’- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைனில் இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சொந்த மக்களை நாம் கைவிட முடியாது என வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது வரை ஆபரேஷன் கங்கா மூலம் ருமேனியாவிலிருந்து 5 விமானங்கள் இந்தியர்களை மீட்டுத் திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளோரில் மீட்பதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள், … Read more

உக்ரைன் தலைநகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது: இந்திய மாணவர்கள் மேற்கு நோக்கி செல்ல அறிவுறுத்தல்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா ஐந்தாவது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைனின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனிடையே, ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. முன்னதாக, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஆப்பரேஷன் கங்கா எனும் பெயரில் ஏர் இந்தியா … Read more

ரஷ்யா மீதான பொருளாதார தடை- அழுத்தத்தில் ரஷ்ய வங்கிகள்? <!– ரஷ்யா மீதான பொருளாதார தடை- அழுத்தத்தில் ரஷ்ய வங்கிகள்? –>

ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் வங்கிகள் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா , பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு இதற்கு முன் இல்லாத அளவாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிய வர்த்தகத்தில் சரிவை சந்தித்த ரூபிளின் மதிப்பு ஒரு கட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 40 சதவீதம் வரை குறைந்து, 119 … Read more

மணிப்பூர் முதல்கட்ட தேர்தல் – 1 மணி நிலவரப்படி 48.88 சதவீதம் வாக்குப்பதிவு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் இன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5  மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு … Read more

உக்ரைனின் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் : இந்திய தூதரகம் தகவல்

டெல்லி: உக்ரைனின் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அன்டை நாடுகளுக்கு செல்ல உக்ரைனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தாக்கிய தேனீ: ட்ரெக்கிங் சென்ற பள்ளி மாணவர்கள் அலறல்

மகாராஷ்டிராவில் ட்ரெக்கிங் சென்ற பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொடுரமாக தாக்கியதில் 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள டைனமிக் இங்க்லீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 64 பேரை ஞாயிற்றுக்கிழமை அம்பா அம்பிகா பகுதிக்கு நான்கு ஆசிரியர்கள் கொண்ட குழு ட்ரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளனர். மாலை 4 மணியளவில் அவர்கள் மலையேறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுத்தேனீக்கள் மாணவர்களை பலமாக தாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more