உக்ரைனின் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் : இந்திய தூதரகம் தகவல்

டெல்லி: உக்ரைனின் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அன்டை நாடுகளுக்கு செல்ல உக்ரைனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தாக்கிய தேனீ: ட்ரெக்கிங் சென்ற பள்ளி மாணவர்கள் அலறல்

மகாராஷ்டிராவில் ட்ரெக்கிங் சென்ற பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொடுரமாக தாக்கியதில் 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள டைனமிக் இங்க்லீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 64 பேரை ஞாயிற்றுக்கிழமை அம்பா அம்பிகா பகுதிக்கு நான்கு ஆசிரியர்கள் கொண்ட குழு ட்ரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளனர். மாலை 4 மணியளவில் அவர்கள் மலையேறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுத்தேனீக்கள் மாணவர்களை பலமாக தாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

ஆபரேஷன் கங்கா | பிரதமர் மோடி மீண்டும் அவசர ஆலோசனை; மீட்புப் பணியில் 4 அமைச்சர்கள்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் அவசர ஆலோசனை மேற்கொண்டார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்தியமாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு … Read more

உக்ரைனில் போய் படிக்க இந்தியர்கள் குவிவது ஏன்.. "நீட்" தேர்வுதான் காரணம்?

உக்ரைன் நாட்டுக்குப் படிக்கப் போய், போரில் சிக்கித் தவித்த மாணவர்களை சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் இல்லாத வசதியா, கல்லூரியா என்று இவர்கள் கேட்கின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள பல தடைகள், முட்டுக்கட்டைகள், இடையூறுகள், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இல்லை என்பதால்தான் இந்த நாடுகளுக்கு அதிக அளவில் இந்திய மாணவர்கள் படிக்கப் போகிறார்கள் என்று பெற்றோர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உக்ரைனில் போர் உக்கிரமாகியுள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதல் நிற்பது போலத் தெரியவில்லை. பேச்சுவார்த்தைக்கு … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம்.. இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவு.! <!– ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம்.. இந்திய பங்குச்சந்தைகள் தொட… –>

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 5-ம் நாளாக தொடரும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தன. இரு நாடுகளிடையே போர் தொடங்கிய நாள் முதலே இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. காலை 9.15 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 754 புள்ளிகள் சரிந்து 55,103 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 216 புள்ளிகள் சரிவடைந்து 16,441 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. Source link

அரியானா தனியார் கம்பெனியில் 3 ஊழியர்களை கொன்ற கொள்ளையர்கள்

குர்கிராம்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் புபேந்திரா, புஷ்பேந்திரா, நரேஷ். இவர்கள் 3 பேரும் அரியானா மாநிலம் குர் கிராம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இயற்கை எரிவாயு கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஒரு மர்ம கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கம்பெனிக்குள் புகுந்தது. அவர்கள் 3 ஊழியர்களையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் … Read more

மீட்பு பணியை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்கள் பயணம்?.. உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இன்று மூன்றாவது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் தரப்பில் 250க்கும் மேற்பட்டோரும், ரஷ்யா தரப்பில் 1,000க்கும் மேற்பட்ட வீரர்களும், பொதுமக்களும் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால், மக்கள் குடும்பம் குடும்பமாக தலைநகர் கீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக வெளியேற்றும் … Read more

'புர்கா'வில் மறைக்கப்பட்ட தங்கம்: விமான நிலையத்தில் சிக்கிய பெண் !

தெலுங்கானாவில் புர்காவில் தங்கத்தை தைத்து கடத்தி செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் தெலுங்கானாவின் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடைகொண்ட தங்கத்தை தனது உடையில் கட்டி கடத்த முயன்ற துபாயை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தங்கத்தை கடத்துவதற்காக, சிறு சிறு பாசிகளாக அதை செய்து கொண்டு, பின் அதை ரோடியத்தின் (rhodium) மூலம் முலாம் பூசி தனது புர்காவில் தைத்து அதை அணிந்திருந்திருக்கிறார் அந்தப் … Read more

டெல்லியில் இந்திய மாணவர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கிருக்கும் இந்தியர்கள், இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசுசிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி விமானங்களில் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், ருமேனியால் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் 2-வது விமானம் நேற்றுஅதிகாலை டெல்லி வந்து சேர்ந்தது. அப்போது விமானத்துக்குள் சென்ற மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை வரவேற்றார். அப்போது அவர்களிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா … Read more

திருப்பதி தரிசன டிக்கெட் விலை அதிரடி உயர்வு: உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு அண்மையில் அவசர ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட்டின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகளின் விலை விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் … Read more