உத்தரபிரதேசத்தில் 55 தொகுதியில் 2ம் கட்ட தேர்தல்; கோவா, உத்தரகாண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

புதுடெல்லி: கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை 55 தொகுதிகளில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் … Read more

உச்சத்தை தொட்டது சர்ச்சை: பிரசாந்த் கிஷோரின் 5 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார் மம்தா!

பிரசாந்த் கிஷோர் தலைமையில் செயல்படும் I-PAC நிறுவனத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்படுத்திய 5 ஆண்டு கால ஒப்பந்தத்தை மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவன ஆலோசனையை பெற்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைத்தது திரிணாமுல் காங்கிரஸ். இந்த வெற்றியால் பல்வேறு மாநிலங்களில் கட்சி வேரூன்ற மம்தா பானர்ஜி விரும்பிய நிலையில், பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் கோவா மாநிலத்தில் கட்சி களமிறங்கியது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என … Read more

தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ரூ.18,839 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்ட முன்முயற்சியை இந்த ஒப்புதல் முன்னெடுத்துச் செல்லும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர ஒப்புதல் அளித்துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை … Read more

சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் சோசலிசவாதிகள் ஆகிவிட முடியாது-அமைச்சர் ராஜ்நாத் சிங் <!– சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் சோசலிசவாதிகள… –>

சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் சோசலிசவாதிகள் ஆகிவிட முடியாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். ராம்நகரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளோருக்கும் சோசலிசத்துக்கும் நெடுந்தொலைவு உள்ளதாகக் குறிப்பிட்டார். கொள்கையில் சமரசம் செய்வோர், ஆட்சியைப் பிடிக்கச் சமூகத்தைப் பிரித்துப் பார்ப்பவர்கள் ஒருபோதும் சமாஜ்வாதி ஆக முடியாது எனக் கூறி மறைமுகமாக சமாஜ்வாதிக் கட்சியைச் சாடினார். ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த பாராபங்கி சோசலிசத்தின் கோட்டையாகத் … Read more

பிரதமருக்கே உரிய பாதுகாப்பு அளிக்காத சரண்ஜித் சிங் பஞ்சாப்புக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்? – அமித்ஷா

லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. சமீபத்தில் அந்தக் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண் டது.   இதையடுத்து, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் தேர்தல் பிரசார நடைமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன. அரசியல் கட்சிகள் வழக்கம்போல பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாரதிய … Read more

குஜராத் அருகே வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

போர்பந்தர்: குஜராத் போர்பந்தர் அருகே வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் கப்பலை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சோதனை நடத்தியதில் போதைப்பொருள் சிக்கியது.

மன் கி பாத்; கருத்து தெரிவிக்க மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: 2022 பிப்ரவரி 27-ல் ஒளிபரப்பாகவுள்ள மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கருத்துக்களை தெரிவிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 2022 பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். This month’s #MannKiBaat programme will take place on the 27th. Like always, I am eager to get your suggestions for the same. … Read more

உத்தரகாண்ட், கோவா தேர்தல் – நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில், நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கும் – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, ஆளும் பாஜக, கடந்த … Read more

விண்ணில் பாய தயாராகும் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட்..! <!– விண்ணில் பாய தயாராகும் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட்..! –>

புவி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது. புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்ட்டவுன் … Read more

உத்தரபிரதேசம் அருகே கோவில் கூட்டத்தில் சிக்கி பக்தர் பலி

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் லட்சுமன் (வயது 65). இவர் அங்குள்ள உள்ள பாங்கே பிகாரி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்டத்தில் லட்சுமன் சிக்கிக் கொண்டார். இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை பார்த்த உறவினர்கள் உடனே அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லட்சுமன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என கோவில் நிர்வாகம் … Read more