மருத்துவமனை ஐ.சி.யு. வார்டில் துப்பாக்கிச் சூடு… இளைஞர் காயம் <!– மருத்துவமனை ஐ.சி.யு. வார்டில் துப்பாக்கிச் சூடு… இளைஞர்… –>

அரியானா மாநிலம் அம்பாலாவில் ஐசியு வார்டில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருத்துவமனையின் கதவை உடைத்து தப்பியோடிய மற்றொரு இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர். ஐசியு வார்டில் இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அதில் பண்டி என்பவன், துப்பாக்கியால் அமன் என்பவனை சுட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையின் கதவை உடைத்து பண்டி தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் தப்பியோடிய இளைஞனை சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.   … Read more

மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்

லம்பேல்பட்: ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அடுத்த கட்ட வாக்குப் பதிவு மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. . 15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். … Read more

கிரிப்டோகரன்சி, உக்ரைன் பற்றி பதிவு பாஜ தலைவர் நட்டாவின் டிவிட்டர் கணக்கு ஹேக்

புதுடெல்லி: பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவின் டிவிட்டர் கணக்கு விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் சமீப காலமாக முக்கிய அரசுத் துறைகள், தலைவர்களின் டிவிட்டர், பேஸ்புக் கணக்குகள், விஷமிகளால் அடிக்கடி ஹேக் செய்யப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவின் டிவிட்டர் கணக்கை விஷமிகள் நேற்று ஹேக் செய்தனர். அதில், உக்ரைனுக்கு நிதி உதவி அளிப்பதாகவும், ரஷ்யாவுக்கு உதவிகள் செய்யும்படி வேண்டுகோள் … Read more

மணிப்பூர் மாநில வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது பாஜக: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்துக் கொடுத்துள்ளது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மணிப்பூர் சட்டப்பேரவைக்கு வரும் 28 மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு தலைநகர் இம்பாலில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூர் மாநிலம் … Read more

இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது – பிரதமர் <!– இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகி… –>

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பஸ்தி பகுதியில் நடைபெற்ற பாஜகவின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கித் தவித்த ஏராளமான இந்தியர்கள் மீட்கப்படுவதாக கூறினார். மேலும், இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், தற்போது நிலவும் இடையூறுகளையும், சிக்கல்களையும் கடந்து அவர்கள் பத்திரமாக … Read more

திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்- பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைனில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 16-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் 4 நாட்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இலவச தரிசன … Read more

கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக சரிவு: கேரளாவில் தொடர்ந்து அதிக பலி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் வீசிய கொரோனா 3வது அலையின்போது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தையும் தாண்டியது. தற்போது, இந்த எண்ணிக்கை நாள்தோறும் மளமளவென சரிந்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:* கடந்த 24 மணி … Read more

சம்ஸ்கிருத பல்கலை. மாணவர் அமைப்பு தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

கொச்சி: கேரள மாநிலம் காலடியில் ஸ்ரீ சங்கராச்சார்யா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பு யூனியன் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பல்கலைக் கழகத்தில் பயிலும் திருநங்கை நாதிரா மெஹ்ரீன் சேர் மன் பதவிக்கு போட்டியிடுகிறார். அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் (ஏஐஎஸ்எஃப்) சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். ஏஐஎஸ்எஃப் மாநிலக் குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் திருநங்கை நாதிரா, ஏற்கெனவே 2019-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். … Read more

உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதாக நாடு திரும்பிய இந்தியர்கள் தகவல்.! <!– உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதாக நாடு திரும்பிய இந்தியர்… –>

உக்ரைனில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், உயிர் பிழைக்க மக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அந்நாட்டில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் இருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் வழியாக மீட்கப்பட்ட இந்தியர்கள் 250 பேருடன், இரண்டாவது ஏர் இந்தியா விமானம் இன்று காலையில் டெல்லி வந்தடைந்தது. அதில் வந்தவர்களுள் ஒருவரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரியா சுபாஷ், தாயகம் திரும்பியது நிம்மதி அளிப்பதாகக் கூறினார். தங்களது உயிரைக் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கு அவர் நன்றி … Read more

பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்- ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நம் நாட்டிற்கு நடவடிக்கை தேவை. பிரதமர் மோடி கவனச்சிதறலை மட்டுமே வழங்குகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more