உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதாக நாடு திரும்பிய இந்தியர்கள் தகவல்.! <!– உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதாக நாடு திரும்பிய இந்தியர்… –>

உக்ரைனில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், உயிர் பிழைக்க மக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அந்நாட்டில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் இருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் வழியாக மீட்கப்பட்ட இந்தியர்கள் 250 பேருடன், இரண்டாவது ஏர் இந்தியா விமானம் இன்று காலையில் டெல்லி வந்தடைந்தது. அதில் வந்தவர்களுள் ஒருவரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரியா சுபாஷ், தாயகம் திரும்பியது நிம்மதி அளிப்பதாகக் கூறினார். தங்களது உயிரைக் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கு அவர் நன்றி … Read more

பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்- ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நம் நாட்டிற்கு நடவடிக்கை தேவை. பிரதமர் மோடி கவனச்சிதறலை மட்டுமே வழங்குகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more

செல்போன் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் அஜய் குமார் அகர்வால். கடந்த 2014ம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதில், ‘போஸ்ட் பெய்ட்’ முறையில் செல்போன் சேவையை பயன்படுத்தி வந்தேன். 2013ம் ஆண்டு நவ.8ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரையிலான கட்டணம்  ரூ.24,609.51 செலுத்தும்படி கூறினார்கள். எனக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ.555 கட்டணம் மட்டுமே  வந்தது. ஆனால், திடீரென அதிக கட்டணம் கேட்டது அதிர்ச்சியை  எனக்கு … Read more

உலகம் முழுவதும் ஆயுஷ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது: பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி

மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று 5-வது வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், பொது மக்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள், செவிலியர்கள், சுகாதார, தொழில்நுட்ப, ஆராய்ச்சி யாளர் கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி யில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லா மல், அனைவருக்கும் அதை சமமானதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய அரசு கொண்டு … Read more

கொரோனா 4ம் அலை எப்போது? – ஆய்வில் வெளியான ஷாக் நியூஸ்!

கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை வரும் ஜூன் மாதத்தில் பரவ வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி "சவாலாக இருப்பினும் மத்திய அரசு துரிதமாக செயல்படுகிறது" – அமைச்சர் எல்.முருகன் <!– உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி &quot;சவாலாக இ… –>

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக்கொண்டு வருவது சவால் நிறைந்த பணி என்றாலும், மத்திய வெளியுறவுத்துறை அங்குள்ள 20 ஆயிரம் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான புகைப்படக் காட்சியை திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.  Source link

வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப ஆர்வமாக உள்ளனர்: மத்திய மந்திரி தகவல்

ஃபரிதாபாத்: அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.   வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட  ராமலிங்கசாமி அடைவு மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள அறிவு பூர்வமான அறிவியல் சூழல் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் பலர் நாடு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர். வெளிநாடு … Read more

உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் கூறியுள்ளது. சண்டை தீவிரமாக நடப்பதால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரபிரதேச 5ஆம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரை சுமார் 55.31 சதவிகித வாக்குகள் பதிவாகின. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 12 மாவட்டங்களைச் சேர்ந்த 61 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை 53 புள்ளி 98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 692 வேட்பாளர்கள் போட்டியிடும் 5ஆம் கட்டத் தேர்தலில் துணை … Read more

தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – சென்னையை சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழப்பு

பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், துங்கதுர்த்தி கிராமத்தில் நேற்று காலை 10.50 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பயிற்சி விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அப்போது அங்கு வயலில் இருந்த விவசாயிகள் உடனடியாக நல்கொண்டா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். நல்கொண்டா எஸ்.பி.ராஜேஸ்வரி மற்றும் வருவாய் துறை,தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ … Read more