உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் கூறியுள்ளது. சண்டை தீவிரமாக நடப்பதால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரபிரதேச 5ஆம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரை சுமார் 55.31 சதவிகித வாக்குகள் பதிவாகின. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 12 மாவட்டங்களைச் சேர்ந்த 61 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை 53 புள்ளி 98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 692 வேட்பாளர்கள் போட்டியிடும் 5ஆம் கட்டத் தேர்தலில் துணை … Read more

தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – சென்னையை சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழப்பு

பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், துங்கதுர்த்தி கிராமத்தில் நேற்று காலை 10.50 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பயிற்சி விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அப்போது அங்கு வயலில் இருந்த விவசாயிகள் உடனடியாக நல்கொண்டா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். நல்கொண்டா எஸ்.பி.ராஜேஸ்வரி மற்றும் வருவாய் துறை,தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ … Read more

உக்கிரமடையும் உக்ரைன் போர்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக, உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த நான்கு நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. … Read more

"ஆப்பரேசன் கங்கா" மீட்பு நடவடிக்கை.. தொடர்ந்து நாடு திரும்பும் இந்தியர்கள்.! <!– &quot;ஆப்பரேசன் கங்கா&quot; மீட்பு நடவடிக்கை.. தொடர்ந்து நாடு திரும… –>

ஆப்பரேசன் கங்கா என்ற பெயரில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பல விமானங்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது… கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுத்த நிலையில், தொடர்ந்து 4 நாட்களாக இருதரப்பும் சண்டையிட்டு வருகின்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு சென்ற மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்நிலையில், முதற்கட்டமாக … Read more

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் 900 க்கும் மேற்பட்டோர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைன்- ரஷிய போர் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்களுடன் வர பக்தர்களுக்கு தடை; தேவஸ்தானம் அறிவிப்பு.!

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் அளித்த பேட்டி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தரிசன டிக்கெட் வைத்திருக்கவேண்டியது கட்டாயம். டிக்கெட்களை காண்பித்தால் மட்டுமே அலிபிரி சோதனை சாவடியில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அலிபிரி சோதனைச்சாவடியிலிருந்து அதிகாலை 3 மணி … Read more

செங்கல் சூளைக்காரர் கண்டெடுத்த வைரம்: எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தில் செங்கல் சூளை நடத்துபவர் கண்டெடுத்த 26.11 காரட் மதிப்புடைய வைரம் ரூ.1.62 கோடிக்கு ஏலம் போயுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருபவர் சுஷில் சுக்லா. இவருக்கு கடந்த பிப்ரவரி 21 அன்று 26.11 காரட் வைரங்கள் கிடைத்தது. அவை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஒரு காரட்டின் மதிப்பு ரூ.3 லட்சத்தில் தொடங்கி ரூ.6.2 லட்சம் வரை சென்றது. இறுதியாக உள்ளூர் … Read more

பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற புதிய நடைமுறையில் விண்ணப்பம்

ஆதார் எண்ணை, இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் அரசின் நலத் திட்டங்கள் சரியான பயனாளியைச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதுடன், பல்வேறு துறைகளில் நடைபெறும் மோசடிகளும் தடுக்கப்படுகின்றன. இந்நிலையில் யுஐடிஏஐ, அண்மைக்காலமாக கையடக்கமான, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை விநியோகித்து வருகிறது. இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படாத செல்பேசி எண்: ஆதாரில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே … Read more

சாகும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வேன்- பிரதமர் மோடி உருக்கம்

வாரணாசி: பிரதமர் மோடி இன்று தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘நான் இறக்கும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதுகிறார்கள். தொண்டர்களின் கட்சியான பாஜகவுக்கு அவர்களால் ஒருபோதும் சவால் … Read more