சாகும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வேன்- பிரதமர் மோடி உருக்கம்

வாரணாசி: பிரதமர் மோடி இன்று தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘நான் இறக்கும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதுகிறார்கள். தொண்டர்களின் கட்சியான பாஜகவுக்கு அவர்களால் ஒருபோதும் சவால் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் விலை உயர்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் விரைவில் மீண்டும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்  தேவஸ்தான அறங்காவலர் குழு அண்மையில் அவசர ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட்டின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகளின் விலை விவரத்தை தேவஸ்தானம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.120க்கு வழங்கப்பட்டு வந்த சுப்ரபாத சேவை டிக்கெட் ரூ.2 ஆயிரமாகவும், … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்ப மறுக்கும் ஹரியானா மாணவி – ஓர் நெகிழ்ச்சிப் பின்னணி

போர் முடியும் வரை உக்ரைன் நாட்டிலேயே தங்கியிருந்து அவர்கள் குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் ஹரியானா மாணவி. உக்ரைன் மீது ரஷ்யா 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உள்பட உலகம் முழுவதும் மக்கள் திரண்டு போர் வேண்டாம் என்ற ஒருமித்தக் குரலை ஒலிக்கச் செய்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும், உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசின் உதவியுடன் பல்வேறு மாணவ மாணவிகள் … Read more

கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் நகரங்களுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை துரிதப்படுத்தி உள்ள நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று ஞாயிறுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்களுக்குக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, கார்கிவ், சுமி, கீவ் நகரங்களில் மிக உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. அதனால் இந்தியர்கள் எங்கும் வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில் நிலையங்களை நோக்கி இப்போதைக்கு செல்ல … Read more

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ் – வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக் கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமும், அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய செயலக சேவையை (CSS) உள்ளடக்கிய பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களில், நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை அதிகாரிகள் வரை பணிபுரிபவர்களுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி உயர்வு பெறவில்லை எனக் … Read more

நான் பெரிய ரௌடி என்பது கேரளா முழுமைக்கும் தெரியவேண்டும் ; கொலை வழக்கில் கைதான நபர் வாக்குமூலம் <!– நான் பெரிய ரௌடி என்பது கேரளா முழுமைக்கும் தெரியவேண்டும் ;… –>

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் விடுதி ஊழியர் பட்டப்பகலில் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நபர், தாம் ஒரு பெரிய ரௌடி என்பதை கேரளா முழுமைக்கும் தெரிவிக்கவே கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான். தம்பானூரிலுள்ள சிட்டி டவர் என்ற தங்கும் விடுதியில் பணியாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை இரு தினங்களுக்கு முன் மர்ம நபர் கொடூரமாக வெட்டிக் கொன்றான். சிசிடிவி காட்சிகளை வைத்து அஜீஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 2 மாதங்களுக்கு முன் … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் புறப்படுகிறது- வெளியுறவுத்துறை தகவல்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா கூறியதாவது:- உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக கங்கா ஆபரேஷன் மூலம் விமானங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், அடுத்த 24 மணி நேரத்தில் ரூமேனியாவின் புகாரெஸ்ட் நகருக்கு ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கு 2 விமானங்களும் … Read more

தீவிரமடையும் ரஷ்யா – உக்ரைன் போர்; உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி அவசர ஆலோசனை.!

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக … Read more

கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு – என்ன காரணம்? ஏன்?

 நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டவுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2021-22ஆம் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, 10 மாதங்களில் இந்தியா 7 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி முதல் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கிய நிலையில், அந்த மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் கோடி ரூபாய்க்கு … Read more

நாய்க்குட்டியை பிரிய மனமில்லாத இந்திய மாணவர்: உக்ரைனை விட்டு வெளியேறுவதில் சிக்கல்

புதுடெல்லி: உக்ரைனில் போருக்கு நடுவே சிக்கித் தவிக்கும் பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனால் அவர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ரேடியோ எலக்ட்ரானிக்ஸில் படிக்கும் இந்திய மாணவர் ரிஷப் கௌஷிக். உலகமே அதிர்ச்சியோடு உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் இவருக்கு தனது செல்ல நாய்க்குட்டியை விட்டு பிரிய மனமில்லை. தன் அன்பிற்குரிய வாயில்லா ஜீவன் … Read more