நாய்க்குட்டியை பிரிய மனமில்லாத இந்திய மாணவர்: உக்ரைனை விட்டு வெளியேறுவதில் சிக்கல்

புதுடெல்லி: உக்ரைனில் போருக்கு நடுவே சிக்கித் தவிக்கும் பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனால் அவர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ரேடியோ எலக்ட்ரானிக்ஸில் படிக்கும் இந்திய மாணவர் ரிஷப் கௌஷிக். உலகமே அதிர்ச்சியோடு உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் இவருக்கு தனது செல்ல நாய்க்குட்டியை விட்டு பிரிய மனமில்லை. தன் அன்பிற்குரிய வாயில்லா ஜீவன் … Read more

"உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை அழைத்து வரும் செலவை அரசே ஏற்கும்" – புதுச்சேரி முதலமைச்சர் <!– &quot;உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை அழைத்து வரும் செலவை … –>

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை புதுச்சேரி அரசே ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். Source link

உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல்- பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவீதம், மதியம் 1 மணி … Read more

உக்ரைனில் இருந்து விமானம் மூலம் 5 தமிழக மாணவர்கள் டெல்லி வருகை

டெல்லி: உக்ரைனில் இருந்து விமானம் மூலம் 5 தமிழக மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர். இன்று காலை சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமன் பாதிப்புகள் எதிரொலி: சில உணவுப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?

இந்தியாவில் உள்ள மக்களிடம் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னையை தீர்க்க அதிக உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர்: பிரதமர் மோடி

பஸ்தி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 6 மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல்கள் எஞ்சியுள்ள நிலையில் பஸ்தியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தப் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆப்பரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள நமது மகள்களும், மகன்களும் முழுமையாக மீட்கப்படுவார்கள். இதற்காக அரசாங்கம் இரவு, பகலாக பணியாற்றிக் … Read more

ஓசூரில் ஹோட்டல் காவலாளியை கொன்று கல்லா பெட்டியில் இருந்த பணம் கொள்ளை.! <!– ஓசூரில் ஹோட்டல் காவலாளியை கொன்று கல்லா பெட்டியில் இருந்த … –>

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் காவலாளியை கத்தியால் குத்தி கொன்று விட்டு 17 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள அந்த ஹோட்டலின் கூரையை உடைத்து, நள்ளிரவில் 3 மர்ம நபர்கள் புகுந்து, கல்லா பெட்டியை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது ஹோட்டலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 60 வயது தாமோதரன் என்ற காவலாளி சத்தம் கேட்டு விழித்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து … Read more

மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.  இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஷேத்ரிகாவ் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாகங்பாம் ரோகித் சிங், நேற்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோகித் சிங் இம்பாலில் … Read more

உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மன்கிபாத் உரையில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், ‘பீகாரின் குண்டல்பூர் கோயிலில் திருடப்பட்ட சிலை இத்தாலியில் இருந்து மீட்கப்பட்டது. 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேலூர் ஆஞ்சநேயர் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசியில் திருடப்பட்ட அன்னபூர்ணாதேவி சிலை மீட்கப்பட்டு இந்தியா கொண்டு … Read more

ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் அந்நாட்டிடம் இருந்து இந்தியா பாதுகாப்பு சாதனங்களை கொள்முதல் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது உக்ரைனில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் மறைமுக பாதிப்புகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ் 400 எனப்படும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தும் வான் பாதுகாப்பு சாதனங்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. எஸ் 400 … Read more