உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மன்கிபாத் உரையில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், ‘பீகாரின் குண்டல்பூர் கோயிலில் திருடப்பட்ட சிலை இத்தாலியில் இருந்து மீட்கப்பட்டது. 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேலூர் ஆஞ்சநேயர் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசியில் திருடப்பட்ட அன்னபூர்ணாதேவி சிலை மீட்கப்பட்டு இந்தியா கொண்டு … Read more

ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் அந்நாட்டிடம் இருந்து இந்தியா பாதுகாப்பு சாதனங்களை கொள்முதல் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது உக்ரைனில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் மறைமுக பாதிப்புகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ் 400 எனப்படும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தும் வான் பாதுகாப்பு சாதனங்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. எஸ் 400 … Read more

சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரி: நிதி ஆயோக் ஆலோசனை

புதுடெல்லி: சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரித் திட்டத்தை அமல்படுத்த நிதி ஆயோக் ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான ஆய்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. நாளுக்கு நாள் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் உடல் பருமன் அடைந்து அவதிக்குள்ளாகின்றனர். குழந்தைகள் மத்தியிலும் உடல் பருமன் நோய் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி மக்கள் தொகையில், அதிகரித்து … Read more

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்..! <!– பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு ம… –>

உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கை முடக்கிய  மர்ம நபர்கள் அதில், ரஷ்யாவுக்கு துணைநிற்போம் என பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதை சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் அதில் ரஷ்யாவுக்கு துணை நிற்போம், பிட்காய்னுக்கு நன்கொடை பெறப்படுகிறது என பதிவிட்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கு வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. உக்ரைனில் … Read more

சத்தீஷ்கரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் ஜபேலி கிராம வனப்பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் 2 பெண் நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். இதையும் படியுங்கள்…சாலை அடையாளங்கள் அழிப்பு: எதிரிகள் நேராக நரகத்திற்கு செல்ல உதவும்- உக்ரைன் நிறுவனம்

இந்தியாவில் கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் : ஒரே நாளில் 10,273 பேருக்கு தொற்று ; 243 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 10,273 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,16,117ஆக உயர்ந்தது.* புதிதாக 243 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் சென்னை பெண் விமானி உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்

தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பயிற்சி விமானி உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி மகிமா உட்பட 2 பயிற்சி விமானிகள் உயிரிழப்பு.#Helicoptercrashed #Telangana. pic.twitter.com/OO4I5bF5Bc — Lankasri FM (@lankasri_fm) February 26, 2022   சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் மகிமா கஜராஜ். 29 வயதான இவர் குண்டூர்  ஆந்திர மாநிலம் பகுதியில் உள்ள விமான பயிற்சி … Read more

உத்தரப் பிரதேச தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.02% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று 12 மவாட்டங்களில் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.02% வாக்குப்பதிவாகியுள்ளது. இது கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதிகளில் காலை 9 மணிக்கு பதிவான வாக்கு சதவீதத்தைவிட 2.3% குறைவாகும். கவனம் பெறும் அயோத்யா: முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் … Read more

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: மாஸ்க் அணிய தேவையில்லை – பொதுமக்கள் ஹேப்பி!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவது முகக்கவசம். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முகக்கவசம் மூலம் உலகளாவிய கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் … Read more

உ.பி.யில். 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்.. <!– உ.பி.யில். 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வரிசையில் … –>

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆவர்முடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். … Read more