உ.பி.யில். 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்.. <!– உ.பி.யில். 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வரிசையில் … –>

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆவர்முடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். … Read more

7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகளை மீட்டுள்ளோம் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த கிலி, நீமா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய இசை, பாடல்களுக்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைந்த அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டார்.  … Read more

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்பு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் இருந்து கடத்தப்பட்ட 600 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுளளதாக மோடி கூறினார். மேலும் வாரணாசி, பீகாரில் இருந்து கடத்தப்பட்ட பழமையான சிலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியுள்ளார். .

மீண்டும் தொடரும் மீனவர் கைது… அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்! அரசுகள் உதவ கோரிக்கை

ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்து, மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இன்று கைப்பற்றியுள்ளனர் இலங்கை கடற்படையினர். இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், `இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துள்ளனர்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. … Read more

ஆக்கிரமிப்பில் ஈடுபடாத ஒரே நாடு இந்தியா: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் 98-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவை சக்திவாய்ந்த நாடாகவும் அறிவாற்றல் மிக்கதாகவும் விழுமியங்கள் கொண்டதாகவும் மாற்ற விரும்புகிறோம். வேறு எந்த நாட்டையும் தாக்கி, ஓர் அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே. அறிவு மற்றும் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா ஒரு … Read more

உக்ரைன் – ரஷ்யா போர்: இந்தியர்களுடன் புறப்பட்டது 3ஆவது விமானம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை குறி வைத்து பல்முனைத் தாக்குதலை வீரர்கள் நடத்தி வருகின்றனர். முன்னதாக, போர் தொடங்குவதற்கு முன்பே உக்ரைனில் சிக்கியிருந்த தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்தன. அதன்படி, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சுமார் 240 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், போர் தொடங்கியதால் அடுத்த இரண்டு விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்கும் பணியில் … Read more

உறையவைக்கும் குளிரிலும் இந்தோ – திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ <!– உறையவைக்கும் குளிரிலும் இந்தோ – திபெத் படையினர் பாதுகாப்ப… –>

ஹிமாச்சல பிரதேசத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் உயரமான மலைப்பகுதியில் இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பனிபடர்ந்து காணப்படுகிறது. இத்தகைய சூழலில், சுமார் 14 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் மைனஸ் 20 டிகிரி குளிரில் நடந்து சென்று இந்தோ திபெத் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மணிப்பூரில் குண்டுவெடிப்பு- 2 பேர் பலி

இம்பால்: 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று 5-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. அடுத்த கட்டமாக மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் குண்டுவெடித்துள்ளது. தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் … Read more

உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது

டெல்லி: உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. ஏற்கனவே 2 சிறப்பு விமானங்கள் மூலம் 469 பேர் அழைத்து வரப்பட்டனர். தற்போது உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: அயோத்தி உட்பட 61 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு

403 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் மொத்தம் 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அயோத்தி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு. வரும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கடைசி இரண்டு கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் … Read more