உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: அயோத்தி உட்பட 61 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு

403 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் மொத்தம் 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அயோத்தி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு. வரும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கடைசி இரண்டு கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் … Read more

உ.பி.யில் இன்று 5-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்: முக்கியத்துவம் பெற்றுள்ள மூன்று தொகுதிகள்

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி10-ல் தொடங்கிய சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. 5-ம் கட்ட வாக்குப் பதிவுஇன்று நடைபெறுகிறது. மொத்தம் 685 பேர் போட்டியிடும்5-ம் கட்ட தேர்தலில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் 90 பெண்கள் களத்தில் உள்ளனர். 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் 3 தொகுதிகள் முக்கியத்துவம் பெருகின்றன. இதில் அயோத்தி, பாஜகவுக்கு சவாலுக்குரியதாக உள்ளது. ஏனெனில், இங்குள்ள சர்ச்சைக் குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதாக ஒவ்வொரு தேர்தலிலும் … Read more

இந்தியாவில் மருத்துவம் படிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஐந்தாவது இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் சுகாதாரத் துறையினருக்குப் பாராட்டு தெரிவித்ததோடு, இந்த இயக்கம் இந்தியாவின் சுகாதார சேவை முறை பற்றிய திறன் மற்றும் இயக்க ரீதியான தன்மையை நிலைநாட்டியுள்ளது என்றார். கடந்த 7 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் இந்த … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் சுகாதார டிஜிட்டல் திட்டம்… மத்திய அமைச்சரவை ஒப்புதல் <!– அடுத்த 5 ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயுஷ்மான… –>

அடுத்த 5 ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் சுகாதார டிஜிட்டல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சாமான்ய மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கான இணைய சேவையை விரிவுபடுத்த மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ  சிகிச்சைகள் தொடர்பான இணைய ஒருங்கிணைப்பு கடந்த ஆண்டுகளில் மிகுந்த பலன் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோ-வின் , ஆரோக்கிய சேது, இ சஞ்சீவினி போன்ற … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் கேரள மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும்- பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்:  ரஷிய ராணுவம் கடந்த 24-ந் தேதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறி வருகிறார்கள். அங்கு கேரளாவை சேர்ந்த 2,340 பேர் மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் இருந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விமானங்கள் மூலமாக தாயகம் திரும்பும் கேரள மாணவர்களின் பயணசெலவை மாநில அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் … Read more

உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது: இந்தியா திரும்பிய மாணவர்கள் பேட்டி

டெல்லி: உக்ரைனில் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பல மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்; அங்கு நிலைமை மோசமாக உள்ளது; சரியான நேரத்தில் எங்களை நாட்டிற்கு அழைத்து வந்த அரசுக்கு நன்றி என உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் சிக்கிய மாணவி; பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி தந்தையிடம் ரூ41 ஆயிரம் மோசடி!

உக்ரைனில் சிக்கி இருக்கும் மகளை மீட்டுத்தருவதாகக் கூறி, மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவரிடம் மர்மநபர் ஒருவர் 41 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். போபாலை சேர்ந்த வைஷாலி என்பவரின் மகள் உக்ரைனில் சிக்கியுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி வைஷாலியை தொடர்பு கொண்ட மர்மநபர், விமானம் மூலம் அவரது மகளை மீட்டு வருவதற்கு பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி, வைஷாலியும் 41 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியாத … Read more

ஹிஜாப் வழக்கின் நீதிபதியை விமர்சித்த நடிகருக்கு ஜாமீன்

கர்நாடக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக அரசையும், வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்தையும் விமர்சித்தார். இதனால் பெங்களூரு சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது வழக்குப் பதிவு செய்து 23-ம் தேதி கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர். இதையடுத்து சேத்தன் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு பெங்களூரு மாநகர … Read more

உத்தரப்பிரதேச தேர்தல்: ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அம்மாநிலத்தில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், 5ஆவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் … Read more

உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

லக்னோ: உத்தர பிரதேச சட்ட சபையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.   இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். 12 மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை … Read more