உக்ரைனில் சிக்கிய மாணவி; பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி தந்தையிடம் ரூ41 ஆயிரம் மோசடி!

உக்ரைனில் சிக்கி இருக்கும் மகளை மீட்டுத்தருவதாகக் கூறி, மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவரிடம் மர்மநபர் ஒருவர் 41 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். போபாலை சேர்ந்த வைஷாலி என்பவரின் மகள் உக்ரைனில் சிக்கியுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி வைஷாலியை தொடர்பு கொண்ட மர்மநபர், விமானம் மூலம் அவரது மகளை மீட்டு வருவதற்கு பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி, வைஷாலியும் 41 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியாத … Read more

ஹிஜாப் வழக்கின் நீதிபதியை விமர்சித்த நடிகருக்கு ஜாமீன்

கர்நாடக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக அரசையும், வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்தையும் விமர்சித்தார். இதனால் பெங்களூரு சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது வழக்குப் பதிவு செய்து 23-ம் தேதி கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர். இதையடுத்து சேத்தன் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு பெங்களூரு மாநகர … Read more

உத்தரப்பிரதேச தேர்தல்: ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அம்மாநிலத்தில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், 5ஆவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் … Read more

உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

லக்னோ: உத்தர பிரதேச சட்ட சபையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.   இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். 12 மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை … Read more

நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய் அஞ்சலி

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு தென்னிந்திய நடிகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழ் நடிகர்கள் சிலர், கண்டீரவா ஸ்டுடியோவில் அமைந்துள்ள புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெங்களூரு சென்ற … Read more

கடைசி 3 கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் உ.பி.யில் முக்கியத்துவம் பெறும் கூட்டணி கட்சிகள்: 57 தொகுதிகளால் பாஜக, சமாஜ்வாதிக்கு பலன்

புதுடெல்லி: உ.பி. தேர்தலில் இன்னும் 3 கட்டவாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. இவை பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இம்மூன்றிலும் உள்ள 173-ல் 57 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜக.வில் அப்னா தளம் 17 மற்றும் நிஷாத் கட்சி16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியில், பிற்படுத்தப்பட்ட ஆதரவு கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் (எஸ்பிஎஸ்பி), 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எஸ்பிஎஸ்பி கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்தது. … Read more

தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்து <!– தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழு… –>

தெலுங்கானாவில் சிறிய ரக பயிற்சி விமானம் வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். நலகொண்டா மாவட்டம் நாகார்ஜுன சாகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் “பிளை ஏவியேஷன்” பிரைவேட் லிமிடட் என்ற பெயரிலான தனியார் விமான பயிற்சி நிலையம் உள்ளது. மதியம் சிறிய ரக பயிற்சி விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகிமா என்ற பெண் விமானி உட்பட இருவர், பயிற்சிக்காகச் சென்றுள்ளனர். அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தின் மீது … Read more

மீதமுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் – நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் நம்பிக்கை

மும்பை: ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.  ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.  இந்நிலையில் உக்ரைன் எல்லை வழியே ருமேனிய எல்லைக்கு வரும் மாணவர்கள் உள்பட இந்தியர்களை தலைநகர் புக்கரெஸ்ட்டிற்கு அழைத்துச் செல்லும் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பும் பணிகளை … Read more

உபி.யில் இன்று 5ம் கட்ட தேர்தல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் இன்று 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 692 வேட்பாளர்கள் … Read more

ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் நெருக்கடி: கீவ் நகரில் இருந்து தப்பி போலந்து வந்த இந்தியர்கள்

புதுடெல்லி: ஹைதராபாத்தை சேர்ந்த ராகேஷ் வெடகிரே (33) என்பவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பிஸினஸ் அனலிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து தப்பியது குறித்து ராகேஷ் கூறியதாவது: கீவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்து கையில் கிடைத்த உடைகள், ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு நானும் எனது நண்பர்களும் 4 கார்களில், போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகரை நோக்கிப் புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டு 3 மணி நேரத்துக்குப் … Read more