உபி.யில் இன்று 5ம் கட்ட தேர்தல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் இன்று 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 692 வேட்பாளர்கள் … Read more

ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் நெருக்கடி: கீவ் நகரில் இருந்து தப்பி போலந்து வந்த இந்தியர்கள்

புதுடெல்லி: ஹைதராபாத்தை சேர்ந்த ராகேஷ் வெடகிரே (33) என்பவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பிஸினஸ் அனலிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து தப்பியது குறித்து ராகேஷ் கூறியதாவது: கீவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்து கையில் கிடைத்த உடைகள், ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு நானும் எனது நண்பர்களும் 4 கார்களில், போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகரை நோக்கிப் புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டு 3 மணி நேரத்துக்குப் … Read more

நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி <!– நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி –>

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். கர்நாடகாவில் உள்ள கண்டீரவ ஸ்டுடியோஸ்-ல் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது நினைவிடத்திற்கு சென்ற நடிகர் விஜய், சமாதியில் மாலை அணிவித்தும், ஆரத்தி காண்பித்தும் அஞ்சலி செலுத்தினார். Source link

பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: திருப்பதியில் ரூ.5 கோடியை தாண்டிய உண்டியல் வசூல்

திருப்பதி : கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ரூ.300 கட்டண விரைவு தரிசனத்தில் 25 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக தினசரி அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதனால் வெள்ளிக்கிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு அளிக்கப்படும் வி.ஐ.பி. பிரேக் … Read more

செல்போன் ஒட்டு கேட்பு பெண் ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி மீது வழக்குப்பதிவு: மகாராஷ்டிரா அரசு அதிரடி

புனே: மகாராஷ்டிரா மாநில போலீஸ் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி. ஆக இருந்தவர் ராஷ்மி சுக்லா. அப்போது, அனுமதியின்றி பாஜ.வுககு ஆதரவாக பல போலீஸ் உயரதிகாரிகளின் போன்கள், செல்போன்களை இவர் ஒட்டு கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது பற்றி அப்போதைய தலைமை செயலாளர் சீத்தாராம்  குந்தே தலைமையிலான குழு விசாரித்து. இவருக்கு எதிராக அறிக்கை அளித்தது. அதில், ‘அச்சுறுத்தல் ஏற்பட்டால் அல்லது தேச துரோக நடவடிக்கைகள் தொடர்பாகத்தான் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக, ராஷ்மி சுக்லா தனது அதிகாரத்தை … Read more

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து 19 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் தவிப்பு

புதுடெல்லி: கரோனா தொற்று முதல் மற்றும் 2வது அலைகளின்போது 2020 மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் 2021 வரை இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்தியாவில் கரோனாவால் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று பாதிப்பால் 19.2 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். உலகிலேயே கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் … Read more

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வரும் டிரோன்கள் ஆயுதங்கள், வெடிகுண்டுகளைக் போடுவதாகத் தகவல் <!– பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வரும் டிரோன்கள் ஆ… –>

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட டிரோன்கள் ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிபொருட்களைப் போட்டுச் சென்றுள்ளதாகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து வந்தது. பதிலடி கொடுத்ததாலும், எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாலும் இப்போது ஊடுருவல் குறைந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு வரும் டிரோன்கள் எறிகணைகள், வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் ஆகியவற்றைப் போட்டுவிட்டுச் செல்வதாகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். … Read more

'பள்ளி என்னை கொன்றுவிட்டது'- பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

அரியானா மாநிலம் பரீதாபாத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் மாணவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மாணவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின் இதுகுறித்து போலீஸ் அதிகாரி அர்ஜூன் துந்தரா கூறியதாவது:- மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட இடத்தில் சோதனை செய்தபோது, கடிதம் … Read more

கண்ணை மறைத்த கள்ளக்காதல் போதை பொருள் கடத்தல் வழக்கில் கணவனை சிக்க வைத்த கவுன்சிலர்

திருவனந்தபுரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்த  பெண் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள  மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில்  வர்கீஸ் (38). இவரது மனைவி சவுமியா (33). இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருடன் சவுமியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. வினோத் துபாயில் பணிபுரிகிறார். அவர் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை … Read more

"ஆம்… எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது" – ஸ்மிருதி இரானி புகாருக்கு பிரியங்கா அதிரடி பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த புகார் குறித்து கேள்வி கேட்டபோது, ‘ஆம், எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது’ என அதிரடியாக அவர் கூறிய பதில் தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் அமேதியும் இடம் பெற்றுள்ளது. நேற்றுடன் முடிந்த இதற்கானப் பிரச்சாரத்திற்கு, அமேதி தொகுதி எம்பியும், மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி அமேதி வந்திருந்தார். அப்போது, பிரியங்காவிற்கு தீவிரவாதிகளுடன் … Read more