கொரோனாவுக்கு உலக அளவில் 5,819,328 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,819,328 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 408,644,943 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 328,529,470 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 88,681 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இருந்து எந்த ஊருக்கு செல்ல இருக்கிறது புல்லட் ரயில்? அறிக்கை தயார்!

சென்னை – பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. டெல்லி – வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்கவும் ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் … Read more

பாஜக.வுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு தருவதால் எதிர்க்கட்சியினருக்கு வயிற்று வலி வந்துள்ளது: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி நேரடி பிரச்சாரம்

சகாரன்பூர்: ‘‘மோடியை முஸ்லிம் பெண்கள் பாராட்டி வருவதால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது’’ என்று பிரதமர் மோடி பேசினார். உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.யின் ஜாட் இன மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள மேற்கு பகுதியில் 11 மாவட்டங்களை சேர்ந்த 58 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சகாரன்பூரில் நேற்று பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக பிரதமர் மோடி பங்கேற்று … Read more

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் மறுக்கப்படாது – ஆளுநர் தமிழிசை <!– புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரி… –>

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் மறுக்கப்படாது என்றும் இங்கு முதலமைச்சர் மட்டுமே முதலமைச்சராக செயல்படுகிறார் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை ஆரியபாளையத்தில் நடைபெற்றது. இதில் முதமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Source link

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரத்தை கேட்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது – ராகுல் காந்திக்கு அசாம் முதல்வர் கேள்வி

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையொட்டி அம்மாநில பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அசாம் முதமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பேசியதாவது: பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா?  மறைந்த ஜெனரல் பிபின் ராவத் தலைமையில் பாகிஸ்தானில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் கூறுகிறது. … Read more

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் 2வது முறையாக நியமனம்

புதுடெல்லி:டாடா குழு நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவன தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த என். சந்திசேகரன் (58) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2வது முறையாக சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டித்து டாடா குழுமம் மீண்டும் நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக டாடா சன்ஸ் நிறுவனம் விடுத்த அறிக்கையில், ‘கடந்த 11ம் தேதி நடந்த டாடா சன்ஸ் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் செயற்குழு தலைவர் சந்திரசேகரின் 5 ஆண்டு பணி குறித்து மதிப்பீடு … Read more

மல்யுத்த வீரர் ‘கிரேட் காளி’ பாஜக.வில் இணைந்தார்: பஞ்சாபில் பிரச்சாரம் செய்கிறார்

புதுடெல்லி: பிரபல தொழில்முறை மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா. மல்யுத்தத்தில் புகழ்பெற்ற ராணா, அன்புடன் கிரேட் காளி என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், டெல்லி அலு வலகத்தில், மூத்த தலைவர் கள் முன்னிலையில், கிரேட் காளி நேற்று பாஜக.வில் இணைந்தார். இதுகுறித்து கிரேட் காளி கூறும்போது, ‘‘நாட்டுக்காக பிரதமர் மோடி செய்து வரும் பணிகளால், அவர்தான் சிறந்த பிரதமர் என்று உணர்கிறேன். அதனால், நாட்டின் வளர்ச்சிக்காக அவர் எடுக்கும் பணிகளில் நானும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வில் … Read more

வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த பாம்பு.. உயிரைப் பணையம் வைத்து பாம்பைக் கொன்ற வளர்ப்பு நாய்கள்.. <!– வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த பாம்பு.. உயிரைப் பணையம் வ… –>

புதுச்சேரியில் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை, இரண்டு வளர்ப்பு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொன்று உரிமையாளர்களை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூலக்குளத்தைச் சேர்ந்த ரமணி – சித்ரா தம்பதி ராட் வீலர் வகையைச் சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகின்றனர். இரண்டில் ஒரு நாய் கடந்த சில தினங்களாக சோர்ந்து காணப்பட்டுள்ளது. மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகும் நாய் சோர்வாகவே காணப்பட்ட நிலையில், மொட்டை மாடியில் உடலில் காயங்களுடன் கண்ணாடி விரியன் பாம்பின் … Read more

பிரதமர் மோடி பஞ்சாப்பிற்கு சாலை வழிக்கு பதில் ஹெலிகாப்டரில் வரலாம் – காங்கிரஸ் எம்.பி. பேட்டி

அமிர்தசரஸ்:  கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.அவர் சாலை வழியே வாகனத்தில் சென்ற போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் தமது பயணத்தை பிரதமர் ரத்துச் செய்தார்.  இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலையொட்டி … Read more

நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் தொடர் நிறைவு: காங்., திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதில், கடந்த 1ம் தேதி 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இரு அவையிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்றுடன் பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதில், புதிதாக எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்ததாக, … Read more