உக்ரைனில் சிக்கி தவித்த 219 இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் மும்பை வந்தது! 2வது விமானம் நாளை அதிகாலை டெல்லி வருகை

மும்பை: ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தனர். ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நள்ளிரவு 2 மணிக்கு டெல்லி வரவுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். … Read more

ஹிஜாப் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: சிஎப்ஐ மீது வழக்கு பதிவு

பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு 11 நாட்கள் தொடர்ச்சியாக‌ விசாரித்தது. மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர். இதையடுத்து உடுப்பிபி.யு. கல்லூரி சார்பில் மூத்தவழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த்வாதிட்டார். … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தல் <!– உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் ம… –>

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமென்றும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். மேலும், போரின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த பிரதமர், … Read more

5 மாநில தேர்தல் ரூ. 1000 கோடி மதிப்பிலான மது- பணம், இலவச பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி: உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரபிர தேசத்தில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மணிப்பூரில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 5 மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு … Read more

இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்; உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வலியுறுத்தல்

டெல்லி: அரசியல் ரீதியில் ஆதரவு தர வேண்டுமென இந்திய பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகொள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. … Read more

இபிஎப் செலுத்த தவறினால் நிறுவனங்களே பொறுப்பு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பணியாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிறுவ னங்களின் பங்களிப்போடு செலுத்தப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் மாதத் தவணை செலுத்தத் தவறினால் அதற்கு தொழில் நிறுவனங்கள்தான் பொறுப்பு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாதத் தவணை செலுத்தத் தவறுவது மற்றும் தாமதமாக செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு நிறுவனங்களே பொறுப்பு என்றுநீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அபய் எஸ் ஓகா ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நிறுவனம் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.85,548 மற்றும் அத்துடன் செலுத்த … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் சென்னை பயிற்சி மாணவி பலி!

ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான பிளைடெக் ஏவியேஷன் செஸ்னா எனும் ப.யிற்சி ஹெலிகாப்டர் ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லாவில் இருந்து புறப்பட்டது. கிருஷ்ணா நதியின் நாகார்ஜுன்சாகர் அணைக்கு அருகே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது துங்கதுர்த்தி கிராமத்தில் விபத்துக்குள்ளானது. பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கிடந்ததுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகிமா என்ற பயிற்சி விமானி உயிரிழந்ததாக தெரிய … Read more

குஜராத் மக்களுக்கு பாஜக அதிக கேடு விளைவித்தது- ராகுல் காந்தி பேச்சு

துவாரகா: குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:- அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை, ஊடகங்கள், காவல்துறை, குண்டர்கள் மற்றும் தினமும் புதிய ஆடைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் முக்கியமில்லை. உண்மைதான் முக்கியம் என்பதை குஜராத் நமக்குக் கற்றுக்கொடுத்தது. மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் எப்போதாவது நல்ல ஆடைகளை அணிந்திருந்தாரா? அமலாக்கத்துறை அல்லது சிபிஐயை தவறாக பயன்படுத்தினாரா? இல்லை. ஏனென்றால் உண்மை … Read more

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் பணம், போதைப் பொருள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் பணம், போதைப் பொருள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருள், மது பாட்டில்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் … Read more

இந்தியாவில் தொற்று குறைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: ‘‘நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்’’ என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க அவ்வப்போது வழிகாட்டி நெறிமுறைகளை மத்தியஉள்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும்மார்ச் மாதத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்று கணிசமாக … Read more