அனைத்து ரயில்களிலும் மீண்டும் தொடங்குகிறது உணவு விநியோகம்

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் உணவு விநியோகம் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தத் பரவலை தடுப்பதற்காக அதே ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, பெருந்தொற்று பரவல் ஓரளவு குறைந்ததை தொடர்ந்து ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வைரஸ் பரவும் அச்சத்தால், ரயில்களில் பயணிகளுக்கு … Read more

பகுதி 2: குவாண்டம் தகவல் தொடர்பு – பாதுகாப்பான எதிர்கால தொழில்நுட்பம்

ஃபோட்டான் ஜோடி எப்படி உருவாகிறது? ஒரு ஃபோட்டான் துகளை இரண்டாக பிரிப்பதன் மூலமாக அல்லது இரண்டு ஃபோட்டான் துகள்களை இணைப்பதன் மூலமாக போட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இப்படி ஆய்வகங்களில் பல நாடுகளில் ஃபோட்டான் ஜோடிகள் உருவாக்கப்பட்டு சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பொட்டாசியம் டைட்டனைல் பாஸ்பேட் (Potassium Titanyl Phosphate -KTP) படிகத்தில் லேசர் அலைகளைச் செலுத்தினால் ஃபோட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இந்த ஃபோட்டான் ஜோடிகளை, தகவல்களைப் பாதுகாக்க சாவிகளை உருவாக்கவும் சாவிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு … Read more

மீண்டும் ஊரடங்கு… மாநில அரசு அதிரடி முடிவு!

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் திரிபுரா மாநில அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இவற்றில் முக்கியமாக வரும் 20 ஆம் தேதி வரை (பிப்ரவரி 20 மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு … Read more

வீட்டுக்காவலில் இருந்த தென்கொரியர்கள் வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரம்.. தென்கொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டம்.! <!– வீட்டுக்காவலில் இருந்த தென்கொரியர்கள் வெளிநாடு தப்பிச் செ… –>

ஜி.எஸ்.டி. மோசடி வழக்கில் சிக்கி, வீட்டுக் காவலில் இருந்த தென்கொரியர்கள் 2 பேர், வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரத்தில் தென்கொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 40 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்தாத முறைகேடு வழக்கில் சிக்கி, செங்கல்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக் காவலில் இருந்த தென் கொரிய மோசடி நபர்கள் இருவரும், தனியார் வாகனம் மூலம் ஐதராபாத்திற்கும், அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு தப்பிச் சென்றதும் … Read more

ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக நோட்டா அறிமுகம்

ஒடிசாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் முதல்முறையாக நோட்டா (விருப்பம் இல்லை) இடம்பெறுகிறது. இந்த புதிய விதியை அமல்படுத்த ஒடிசா மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசாவில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு, 107 நகராட்சிகள் மற்றும் புவனேஸ்வர், கட்டாக், பெர்ஹாம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏற்கனவே, ஒடிசா சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் வாக்காளர்களுக்கு நோட்டா வைக்கப்பட்டிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் … Read more

ஒரு மகாராஜா இங்கிருக்கிறார்… மற்றொருவர்… ‘மை நேம் இஸ்’ ஜோதிராதித்ய சிந்தியா: ஒன்றிய அமைச்சரை கிண்டலடித்த ஆதிர் ரஞ்சன்

புதுடெல்லி: எனது பெயர் ஜோதிராதித்யா சிந்திய என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் தெரிவிக்க விரும்புகிறேன்’ என ஒன்றிய அமைச்சர் மக்களவையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை கேள்வி நேரத்தின் போது  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை (மத்திய பிரதேச காங்கிரசில் இருந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விலகியவர். இதனால், அங்கு பாஜக ஆட்சி அமையக் காரணமானது. இதற்கு பரிசாக … Read more

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவண காப்பகம் சொல்வதென்ன?

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 11 புள்ளி 8 சதவிகிதம் அதிகம். 2020-ல் பதிவான 50 ஆயிரத்து 35 வழக்குகளில், 30 ஆயிரத்து 142 வழக்குகள் … Read more

நேரு பிரதமராக இருந்தபோதுதான் கல்வான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியை இழந்தோம்: லடாக் பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியதாவது: மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளது. குறிப்பாக, சீனா மற்றும் திபெத் எல்லையில் வடக்கு பகுதியில் கிராமங்களை முன்னேற்ற, துடிப்பான கிராமம் திட்டம் மூலம்பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நான் திபெத், சீனா,பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பகுதியான லடாக்கை சேர்ந்தவன். அங்கு எப்போதும் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பகுதியை காங்கிரஸ் அரசுகள் பின்தங்கிய பகுதியாகவே … Read more

அடுத்து நம்ம ஆட்சி தான் – அடித்து சொல்லும் ராகுல் காந்தி!

கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார். கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் கூட பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் பரிதவித்தது. இதை அடுத்து சுயேட்சைகள் மற்றும் இதரக் … Read more

ஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.   இந்த தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 4 போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.   பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்…இளவரசர் … Read more