’’வறுமையை வெறும் மனநிலை என்றவர்தானே!” – மாநிலங்களவையில் ராகுல் காந்தி மீது நிர்மலா சீதாராமன் விளாசல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் கடுமையாக விமர்சித்துள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2022-23 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஏழை மக்களைப் புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடிய நிலையில், மாநிலங்களவையில் இன்று பதிலுரை ஆற்றிய நிர்மலா சீதாராமன், 2013-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதை மேற்கோள் காட்டினார். அவர் பேசும்போது, “உங்களுடைய முன்னாள் தலைவர் இதே அவையில் 2013-ல் பேசும்போது வறுமை என்பது உணவு, … Read more

மோடிக்கும் குழந்தை பிறக்கட்டும்.. குடும்ப அரசியலை நடத்தட்டும்.. சொல்கிறார் லாலு

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், பிரதமர் நரேந்திர மோடியும் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்ப அரசியலை நடத்த கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். குடும்ப அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது சாடியிருந்தார். இந்தியாவில் குடும்பத்தோடு அரசியலில் இருக்கும் தலைவர்களில் லாலுவும் ஒருவர். இவர் முதல்வராக இருந்தார். பின்னர் இவரது மனைவி ராப்ரி தேவி முதல்வரானார். இவரது … Read more

'உத்தரவுகளுக்கு இடைக்கால தடை கிடையாது' – ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம் <!– 'உத்தரவுகளுக்கு இடைக்கால தடை கிடையாது' – ஹிஜாப் வழக்கில் … –>

ஹிஜாப் விவகாரம் குறித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தேசிய அளவில் பெரிதாகக் கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை மாணவர்கள் அணியக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு நிறைவு – மாநிலங்களவை மார்ச் 14 வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக கடந்த ஜனவரி 31-ம் தேதி பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை மார்ச் 14-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என துணை சபாநாயகர்  அறிவித்தார். அடுத்த மாதம் … Read more

கேரளா, மே.வங்கம் போல உ.பி. மாறிவிடக்கூடாது!: யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு..!!

டெல்லி: கேரளா, மேற்குவங்கத்தை போல உத்திரப்பிரதேசம் மாறிவிடக்கூடாது என்ற யோகி ஆதித்யநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உத்திரப்பிரதேச மாநில தேர்தல் பரப்புரையின் போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தேர்தலில் பாஜக தோற்றால் உத்திரப்பிரதேசம் மாநிலமானது கேரளா, மேற்குவங்கம் மாநிலம் போல் ஆகிவிடும் என தெரிவித்தார். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் … Read more

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

“ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு கல்லூரிகள் அனுமதி மறுத்ததால், இந்தப் பிரச்னை பூதாகரமானது. ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவித்து ஒருதரப்பு மாணவர்களும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை முன்வைத்து சில கல்லூரிகளில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. … Read more

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினை ஆக்காதீர்: அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. … Read more

பிரதமர் என்றும் பாராமல்… காங்கிரஸ் கடும் தாக்கு!

நாடாளுமன்றத்தின் நேரத்தை பிரதமர் நரேந்திர மோடி வீணடித்து விட்டதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் … Read more

நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்த போதே கோவாவை விடுவித்திருக்கலாம் – பிரதமர் மோடி <!– நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்த போதே கோவாவை விடு… –>

நேரு நினைத்திருந்தால், 1947-ல் சுதந்திரம் கிடைத்த போதே, போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுவித்திருக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வருகிற 14ஆம் தேதி, கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி, அம்மாநிலத்தின் மப்பூசா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, நேரு நினைத்திருந்தால் நாடு சுதந்திரம் அடைந்த சில மணி நேரங்களிலேயே கோவாவை விடுவித்திருக்கலாம் எனவும், ஆனால், போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுக்க, சுதந்திரத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் ஆனது … Read more

கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி

பனாஜி: 40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.க. சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க காங்கிரஸ் அரசு 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என தெரிவித்தார். இந்நிலையில், கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி … Read more