ஹிஜாப் விவகாரம் | 'எங்கள் மகள்களின் போன் நம்பரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்' – பெற்றோர் புகார்

பெங்களூரு: ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த கர்நாடக மாணவிகளின் தனிப்பட்ட செல்போன் எண்களை பொதுவெளியில் சிலர் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அம்மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். உடுப்பி மாவட்ட காவல் கண்காளிப்பர் என்.விஷ்ணுவர்த்தனை சந்தித்த மாணவிகளின் பெற்றோர், ”எங்கள் பிள்ளைகளின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இதனை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர். இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய காவல் துறை, உரிய … Read more

அரசு ஊழியர்கள் செம ஹேப்பி – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 700 அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையை, முதலமைச்சர் வழங்கி உள்ளார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று தான், ஒப்பந்த அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது. இந்நிலையில், டெல்லி நீர்வளத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து … Read more

7 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– 7 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி – நிதியமைச்சர… –>

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், நேரடி அந்நிய முதலீடும் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பட்ஜெட் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். பிஎம் கதி சக்தித் திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இதுவரை இல்லா வகையில் செலவிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார். வேளாண்மையில் டிரோன்களின் பயன்பாட்டால் உரங்கள் பூச்சிக்கொல்லிகளைத் திறமையாகப் பயன்படுத்தவும், பயிரிடும் பரப்பு, விளைச்சல் ஆகியவற்றை … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் திறக்கப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோவிலுக்கு … Read more

நாடு முழுவதும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11% வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50,035 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 11.8% அதிகம். 2020- ல் பதிவான 50,035 வழக்குகளில் 30,142 வழக்குகள் மோசடியை உள்நோக்கமாக கொண்டவை என்றும், இது மொத்த வழக்குகளில் 60.2% … Read more

“மத்திய பட்ஜெட், `இந்தியா 100’ என்ற இலக்கில் தயாரிக்கப்பட்டது”-அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த 2008-09 ம் நிதியாண்டில் குறைவான பொருளாதார நெருக்கடியின்போது, பணவீக்கம் 9.1 சதவிகிதமாக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அது 6.2 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிலையான, நீடித்த பொருளாதார மீட்சியை பட்ஜெட் நோக்கமாக கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் முடிவு நாட்டின் விவசாயத் துறையை நவீனப்படுத்தும் கருவியாக … Read more

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல் உ.பி. மாறினால்…’ – யோகிக்கு பதிலடிகளுடன் அணிவகுத்த தலைவர்கள்

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேச மாறிவிடும்’ என்று பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா எனப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது, “கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசு, உங்கள் நம்பிக்கையை மனதில் வைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அர்ப்பணிப்புடன் … Read more

பார்த்துட்டே இருங்க.. காவிக்கொடிதான்.. தேசியக் கொடியாகப் போகுது.. பாஜக தலைவர் பரபர பேச்சு

பார்த்துக் கொண்டே இருங்கள். எதிர்காலத்தில் காவிக்கொடிதான் இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கும் என்று கர்நாடக மூத்த பாஜக தலைவரும், அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட் வரை இந்த விவகாரம் போயுள்ளது. இந்த நிலையில், தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பேசியுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா. ஷிமோகாவில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் இந்துத்வா … Read more

பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல் காந்திக்கு வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கண்டனம் <!– பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல் காந்த… –>

பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களை விட்டுவிட்டதை அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் கண்டித்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கேரளம் போல் ஆகிவிடும் என யோகி ஆதித்யநாத் கூறியதற்கு டுவிட்டரில் பதிலளித்த ராகுல்காந்தி, காஷ்மீர் முதல் கேரளம் வரையும், குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையும் உள்ள பண்பாடுகளின் ஒன்றியமான இந்தியா அழகானது எனத் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்துள்ள திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அழகான வடகிழக்கு மாநிலங்களை ராகுல்காந்தி மறந்து விட்டதாகவும், தாங்களும் … Read more

தொடர்ந்து உயராமல் இருக்கும் பெட்ரோல்-டீசல் விலை: நாளை சதத்தை தொடுகிறது

புதுடெல்லி: பெட்ரோல்-டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாறுதல் செய்து நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெற்று உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை பெட்ரோல்-டீசல் விலையை மாற்றம் செய்யும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் மிக அதிகமாக அதிகரித்தது. முக்கிய நகரங்களில் 100 ரூபாயை கடந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து தினமும் … Read more