நேரு குடும்பத்துக்கு உதவ அரசியல் சாசனத்தில் பல திருத்தங்களை காங்கிரஸ் செய்தது – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: நேருவின் குடும்பம் மற்றும் அதன் வாரிசுகளுக்கு உதவுவதற்காக அரசியல் சட்டத்தில் பெரிய திருத்தங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். ‘இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்’ என்ற தலைப்பில் விவாதத்தை மாநிலங்களவையில் தொடங்கிவைத்துப் பேசிய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், “குடும்பத்துக்கும், வாரிசுகளுக்கும் உதவுவதற்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் துணிச்சலுடன் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியது; திருத்திக் கொண்டே இருந்தது. … Read more

“தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் ஓர் உண்மையான மேதை!” – பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஓர் உண்மையான மேதை” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு உண்மையான மேதையாக … Read more

“சுதந்திரப் போராட்டம் பற்றி மோடிக்கு அதிகம் தெரியாது!” – மாநிலங்களவையில் கார்கே காட்டம்

புதுடெல்லி: “பிரதமர் மோடிக்கு நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றி அதிகம் தெரியாது. மக்களவையில் பேசிய அவர், அரசியல் சாசனத்தை உருவாக்கியதற்காக காங்கிரஸைப் பற்றி கிண்டல் செய்தார்” என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே காட்டமாக பேசினார். இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால புகழ்பெற்ற பயணம் என்ற தலைப்பில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “நாட்டுக்காக போராடாதவர்களுக்கு சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் முக்கியத்துவம் எப்படி தெரியும்? ஆனால், நாங்கள் பொய் சொல்வதாக பிரதமர் … Read more

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு: இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

புதுடெல்லி: “மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்” என்று இந்தியா – இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு … Read more

வங்கதேச இந்துக்களுக்காக இந்தியா குரல் எழுப்ப முடியவில்லை: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்துக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்திய அரசால் குரல் எழுப்ப முடியவில்லை என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிங்கந்த் துபே, “வங்கதேசம் இந்த தினத்தில்தான் தனது சுதந்திரத்தைப் பெற்றது. இதற்காக நடந்த போரில் இந்திய ராணுவம், பல ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினரை சிறைபிடித்தது. அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானில், பாகிஸ்தானால் ஜனநாயகம் அழிக்கப்பட்டபோது இந்தியா அதனை மீட்டெடுத்தது” என்று தெரிவித்தார். … Read more

காட்டு யானை தாக்கி 2 சகோதரிகள் ஒடிசாவில் உயிரிழப்பு

ஒடிசாவில் காட்டு யானை தாக்கியதில் சகோதரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கன்டாபள்ளி கிராமத்தில் ஒரு குடும்பம் குடிசை வீட்டில் வசித்து வந்தது. இந்த கிராமம் போனாய் வனப்பகுதிக்கு அருகே உள்ளது. அங்கு காட்டு யானை ஒன்று நேற்று வந்து குடிசை வீட்டை சேதப்படுத்தியது. யானையை பார்த்ததும் வீட்டில் இருந்த பெரியவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால், அந்த வீட்டில் சமியா முண்டா (12), சாந்தினி முண்டா (3) என்ற இரு சகோதரிகள் மட்டும் … Read more

பெண்களுக்கு LICயில் வேலை வாய்ப்பு… மாதம் ரூ.7000 உதவித்தொகையுடன் பயிற்சி

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. கடந்த வாரம், டிசம்பர் 9ம் தேதி, பிரதமர் மோடி எல்ஐசியின் பீமா சகி யோஜனாவைத் தொடக்கி வைத்தார்.

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு

புதுடெல்லி: இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க 3 நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்தார். அவரை, டெல்லி விமான நிலையத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவரை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல் … Read more

1971 பாக்., போரில் வெற்றியை ஈட்டித் தந்த வீரர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

புதுடெல்லி: 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களின் துணிச்சலைப் போற்றி உள்ளனர். அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டு வெற்றி பெற்றது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த போரில், பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. பாகிஸ்தான் படைத் … Read more

இவிஎம் சர்ச்சை: உமர் அப்துல்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் பதிலடி

புதுடெல்லி: “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மூலம் 100 எம்,பி.க்களைப் பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்த பின்னர் அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி இப்போது குறை கூறுவது தவறு” என்று கூறிய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர், “முதல்வரான பின்னர் கூட்டணி கட்சியினருடன் ஏன் இந்த அணுகுமுறை?” என்று வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், … Read more