திருப்பதி மலையில் திடீர் காட்டுத் தீ

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோடை காலம் தொடங்கி உள்ளதால் திருப்பதி மலையில் நன்கு வளர்ந்துள்ள மரங்களில் உள்ள இலைகள் மற்றும் சருகுகள் காய்ந்து உள்ளன. இவை காற்றினால் உதிர்ந்து கீழே விழுந்துள்ளது. இந்த நிலையில் திருப்பதி மலையில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ள வனபகுதிகளில் திடீரென தீ பற்றி எரிந்தது. மளமளவென எரிந்த தீ காட்டு பகுதி முழுவதும் பரவியது. இதில் வனப்பகுதியில் உள்ள … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா; 255 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 23,598 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 11,499 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,05,844-ஆக உயர்ந்தது.* புதிதாக 255 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

உத்தர பிரதேசத்தில் நிறைவுபெற்றது 5ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள்

உத்தர பிரதேசத்தில் நாளை நடைபெறும் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி கட்ட பரப்புரை நிறைவடைந்துள்ளது. 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், அயோத்தி உட்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி என முக்கிய தலைவர்கள் இந்த தொகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் … Read more

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உத்தரவிடப்படும்: பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி

புதுடெல்லி: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்த நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பெரும்பான்மை பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. உக்ரைனில் சுமார் 24,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவ, மாணவியர் ஆவர். தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ரஷ்ய … Read more

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் <!– கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில, யூனியன் பிரதேசங்களுக… –>

நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து பொதுக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. சமூக, சமய நல்லிணக்க, விளையாட்டு, உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான தடைகளில் தளர்வுகளை அளிக்க கோரி அறிவுறுத்தி உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள் உள்ளிட்டவைகளை அந்தந்த பகுதிகளின் சூழலுக்கு ஏற்ப முழு அளவில் இயங்க அனுமதிக்குமாறு மத்திய உள்துறை செயலாளர் அஜெய் பால்லா, மாநில … Read more

உக்ரைன் இந்தியர்களை மீட்கும் முயற்சி – மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயர்படிப்புகள் படித்து வருகிறார்கள். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து  இருப்பதை தொடர்ந்து அவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் ஒரு விமானம் உக்ரைன் புறப்பட்டது. ஆனால் உக்ரைன் வான்வெளி மூடப்பட்டதால் அந்த விமானம் மீண்டும்  இந்தியா திரும்பிவிட்டது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது சர்வதேச … Read more

நாட்டில் முதல் முறை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒன்றிய செயலர் நியமனம்

புதுடெல்லி:  நாட்டில் முதல் முறையாக ஒன்றிய சட்டத்துறை செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை செயலாளராக இருந்த அனூப் குமார் மெந்திராட்டா, ெடல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம், அனூப் குமார் பெயரை பரிந்துரை செய்திருந்தது. அனுப் சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டபோது, அவர் டெல்லியில் நீதித்துறை அதிகாரியாக  இருந்தார். இந்நிலையில், நீதித்துறை அதிகாரியான இவர் பதவி மூப்பு அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக … Read more

"எங்கள் மகனை மீட்டுக் கொடுங்கள்" புதுச்சேரி முதல்வரிடம் பெற்றோர் உறுக்கம்

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவரை மீட்டு தாயகம் அழைத்து வருமாறு முதல்வர் ரங்கசாமியிடம் மாணவரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த நித்திஷ்குமார் என்ற மாணவர் உக்ரைனில் வினிஸ்டா நகரில் மருத்துவம் பயின்று வருகிறார். தற்போது அங்கு போர் நடந்து வருவதால், உயிருக்கு அஞ்சியும் உணவு கிடைக்காமலும் தவித்து வருகிறார். இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் நேரில் முறையிட்ட மாணவரின் பெற்றோர், தங்கள் மகனை பத்திரமாக மீட்குமாறு கோரினர். … Read more

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி; திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா? – அமித் ஷா கேள்வி

புதுடெல்லி: தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாதபுதிய கூட்டணி பேசப்படுகிறது. இதன் மீதான ஒரு கேள்வியில் அக்கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா? என மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 10 முதல் துவங்கி உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கி உள்ளார். அதில், தேசிய … Read more

பீகார் மாநிலம் ககாரியா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயம் <!– பீகார் மாநிலம் ககாரியா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் … –>

பீகார் மாநிலம் ககாரியா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் அமிதேஷ் குமார், முதற்கட்ட விசாரணையின்படி நகரில் 3 குண்டுவெடிப்புகள் நிகழ்துள்ளதாகவும், அவற்றில் 2 குண்டு வெடிப்புகள் குறைந்த அளவிலான தீவிரம் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருபதிலிருந்து இருபத்து மூன்று அளவிலான சிறிய ரக வெடிகுண்டுகள் தொடர்ந்து தரையில் விழுந்ததால், பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறினார். மேலும், … Read more