'தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு நிலையங்கள் எத்தனை? – மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் 890 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இதுவரை தமிழகத்தில் 69 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த ஆண்டு வரை 3,628 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இந்தியாவுக்கு எதிராக பொய் செய்தி; 60-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியதாவது: கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக பொய்யான செய்திகள் வெளியிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடந்த 2 மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிட்ட யூடியூப் உள்ளிட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் … Read more

இனி 12 மணி நேரம் வேலை? அரசு ஊழியர்களுக்கு ஷாக்!

இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் 6 நாட்கள் வேலை முறை அமலில் உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை செய்து வருகிறார்கள். இதனிடையே, தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இந்த புதிய ஊதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு … Read more

அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டம், குளிர் இருக்கும் – வானிலை ஆய்வு மையம் <!– அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில… –>

அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டமும் குளிரும் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிட்ட தட்ட அனைத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையில் சரிவு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி உத்தரப்பிரதேசம் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலையிலும் நள்ளிரவிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2 நாட்களுக்கு … Read more

பிரபல மல்யுத்த வீரர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

புதுடெல்லி : உலக மல்யுத்த கேளிக்கை நிகழ்ச்சியால் பிரபலம் ஆனவர், ‘தி கிரேட் காளி’ எனப்படும் தலிப்சிங் ராணா. அவர் பஞ்சாப் மாநிலத்தில் போலீ்ஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தலிப்சிங் ராணா, நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். அக்கட்சி அலுவலகத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்சிங் ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். ‘‘காளி எங்கு வசித்தாலும் அவரது இதயம் இந்தியாவில்தான் இருக்கும்’’ என்று ஜிதேந்திர சிங் புகழாரம் சூட்டினார். தலிப்சிங் ராணா … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,807,191பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.07 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,807,191 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 406,052,643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 325,881,756 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 89,595 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்கட்டமாக 58 தொகுதிகளில் அமைதியாக நடந்த தேர்தல்; உ.பி.யில் 60.17% வாக்குகள் பதிவு: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நேற்று அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 60.17 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்.10-ம் தேதி (நேற்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. … Read more

மோடியைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருது.. நக்கலடிக்கும் ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து நான் கொஞ்சம் கூட பயப்படவில்லை. மாறாக அவரது பிடிவாத குணத்தைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி , நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். அதேபோல ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் ஒரு விரிவான பேட்டி அளித்திருந்தார். அனைத்திலும் அவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார். ராகுல் காந்தி லோக்சபாவுக்கு சரியாக வருவதில்லை, விவாதங்களை சரியாக கவனிப்பதில்லை என்றும் பிரதமர் … Read more

இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது – பிரதமர் மோடி <!– இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது … –>

இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சஹரன்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியான முத்தலாக் நடைமுறையை ஒழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.  பாஜகவிற்கு இஸ்லாமிய பெண்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகள் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் பிரதமர் மோடி … Read more

திருப்பதியில் 16ந் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் – பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை

திருமலை: உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  மேலும் திருப்பதி ஏழுமலையான் தரிசிக்க 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டது.  இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் … Read more