உ.பியில் கார் விபத்து: காயமின்றி தப்பினார் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர்

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூரின் ஜமானியா, முஹமதாபாத் உள்ளிட்ட பல்வேறு சட்டசபை தொகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். இன்று காலை வாரணாசியில் இருந்து தனது சொந்த ஊரான காஜிபூருக்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென ராஜ்காட் பாலத்தின் சரிவில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தூண் மீது மோதியது. இதில் காரின் இடது பக்கம் சேதமடைந்தது. காரின் ஒரு சக்கரமும் … Read more

அண்டை நாடுகளின் எல்லைக்கு வர உத்தரவு இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு: முழு செலவையும் அரசே ஏற்கிறது

உக்ரைனில் இந்தியர்கள், இந்திய மாணவர்கள் 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் 4 ஆயிரம் பேர் ஏற்கனவே நாடு திரும்பி விட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. உக்ரைன் தனது நாட்டு வான் எல்லையை மூடி விட்டதால், மற்றவர்களை மீட்க சென்ற இந்திய சிறப்பு விமானங்கள் நேற்று முன்தினம் திரும்பி வந்து விட்டன. தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் நுழைந்து இருப்பதால், இவர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இவர்களை உடனடியாக மீட்கும்படி, … Read more

உக்ரைன் போரை நிறுத்த உலகின் ஒரே நம்பிக்கை மோடி ஜி தான் – உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் ஹேமா மாலினி

லக்னோ: பாஜக மக்களவை எம்.பி.யான ஹேமா மாலினி உத்தரப் பிரதேசத் தேர்தலுக்காக பல்லியா பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தார். தனது பிரச்சாரத்தில், ‘உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை நாடுகின்றனர்’ என்று தெரிவித்தார். ஹேமா மாலினி பிரச்சாரத்தில், “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் கொண்டுவந்துள்ளதை கண்டு உலகமே வியக்கிறது. மோடி ஜி தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார், உலகம் அவரை மதிக்கிறது. தற்போது நடக்கும் உக்ரைன் – ரஷ்யா … Read more

இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்.. ஹங்கேரி, ருமேனியா வழியே மீட்க திட்டம்..! <!– இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்.. ஹங்கேரி, ருமேனிய… –>

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையில், ருமேனியா, ஹங்கேரி வழியாக பத்திரமாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அங்குள்ள பல்லாயிரக்கணக்காக இந்தியர்கள் விமானப் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக வெளியேற வழியின்றி பாதுகாப்பான இடங்களில் பதுங்கி உள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அதன் அண்டை நாடுகளான … Read more

இணைய பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை – மத்திய இணை மந்திரி தகவல்

சென்னை: தேசிய தரவு மற்றும் கிளவுட் வரைவு கொள்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது 80 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்பு முதல் வேலை, பொழுதுபோக்கு வரை பல்வேறு நோக்கங்களுக்காக 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையில், இணைய பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு … Read more

உள்ளாட்சி அமைப்பு தமிழகத்துக்கு ரூ.267 கோடி நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: தமிழக நகர்புற  உள்ளாட்சி அமைக்களுக்கு ரூ.267 கோடி தொகையை விடுவித்து ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை வழங்கும்படி கோரிக்கை வைத்தார். இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக நகர்புற  உள்ளாட்சி அமைக்களுக்கு ரூ.267 கோடி தொகை … Read more

ரஷ்யா மீது பொருளாதாரத் தடையின் எதிரொலி – இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதன் எதிரொலியாக பங்குச் சந்தைகள் கணிசமாக உயர்ந்தன. தங்கம் மற்றும் கச்சா எண்ணெயும் விலை குறைந்துள்ளன. உக்ரைன் மீது இரண்டாவது நாளாக தாக்குதலை தொடர்வதால், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக, இன்று ஹான்சாங், நிக்கி, கோஸ்பி உள்ளிட்ட ஆசியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் கணிசாமக உயர்ந்தன. … Read more

பிஹாரில் கூட்டணி, உ.பி-யில் பாஜக எதிர்ப்பு: முகேஷ் சஹானியின் இருவேறு அரசியல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டும் என விகாஸீல் இன்ஸான் கட்சி தலைவர் முகேஷ் சஹானி கூறியுள்ளார். பிஹாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் இவர், உபி சட்டப்பேரவை தேர்தலில் எதிர்த்து இருவேறுவகை அரசியல் செய்து வருகிறார். பிஹாரின் மீனவர் சமுதாய ஆதரவுக் கட்சியாக இருப்பது விகாஸீல் இன்ஸான் கட்சி(விஐபி). இதன் தலைவரான முகேஷ் சஹானி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இடம் பெற்றிருந்ததோடு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தது. மேலும், பாஜக – … Read more

பட்டப்பகலில் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்த இளைஞர் வெட்டிக்கொலை ; கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை <!– பட்டப்பகலில் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்த இளைஞர் வெட… –>

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட்டப்பகலில் ஹோட்டலுக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வரவேற்பு அறையில் இருந்த இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற அந்த இளைஞர், தம்பானூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இரவு பணியை முடித்துவிட்டு காலை எட்டரை மணியளவில் வீட்டுக்கு புறப்படுவதற்காக ஐயப்பன் தயாராகிக் கொண்டிருந்த நேரம் பார்த்து அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர், ஐயப்பனை சரமாரியாக … Read more

உக்ரைன் பதற்றம்- டெல்லியில் ரஷிய தூதரகம் முற்றுகை

புதுடெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, இரண்டாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வான்வழி மூடப்பட்டதால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத நிலை உள்ளது.  உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். … Read more