3 பாயின்ட் சீட் பெல்ட் இனிமேல் கட்டாயம்: கார் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கார் தயாரிப்பாளர்கள்  இனிமேல் அனைத்து இருக்கைகளிலும் ‘மூன்று பாயின்ட் சீட் பெல்ட்’ மட்டுமே பொருத்த வேண்டும்,’ என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.தற்போது காரில் பயணிப்பவர்களில் ஓட்டுனர், ஓட்டுனர் அருகே அமர்ந்திருப்பவர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் இருவர் மட்டுமே ‘3 பாயின்ட் சீட் பெல்ட்’ அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு, விமானங்களில் பயன்படுத்தப்படுவது போல் இடுப்பில் பொருத்தப்படும் பெல்ட் மட்டுமே பொருத்தப்படுகிறது. இதனால், விபத்து நேரிடும் போது … Read more

"நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்" – அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவையில் கீழ்காணும் தகவல்களை இன்று வழங்கியுள்ளார். “ இந்தியாவில் புதிய பசுமை  விமான நிலையங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்கும் பசுமை விமான நிலையக் கொள்கை, 2008-ஐ இந்திய அரசு வகுத்துள்ளது. நாடு முழுவதும் 21 பசுமை  விமான நிலையங்கள். அதாவது கோவாவில் உள்ள மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, ஷிர்டி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவில் கலபுரகி, பிஜப்பூர், ஹாசன் மற்றும் … Read more

காங்கிரஸ் அலுவலகம், சோனியா காந்தி வாடகை செலுத்தவில்லை: ஆர்டிஐ தகவல்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. நாடுமுழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் சொந்த அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும் என்று டெல்லி வீட்டுவசதி வாரியம் கேட்டுக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இது நடைமுறைக்கு வந்து விட்டது. இதன்படி … Read more

உ.பி தேர்தல்.. பாஜகவை கைவிடாத ஜாட்ஸ்.. அகிலேஷுக்கு போன மாயாவதி ஓட்டுகள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மேற்கு உத்தரப் பிரதேசம் இந்த சட்டமன்ற தேர்தலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது ஜாட் சமூகத்தினர், விவசாயிகள் நிறைந்து வாழும் பகுதி. மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், லக்கிம்பூர் கேரியில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் கார் … Read more

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு-அமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இ… –>

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சியில் மின் இணைப்பு இல்லாமல் இருண்ட காலம் அதிகமாக இருந்தது என்றார். ஆனால் தற்போது ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து … Read more

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது வழித்தட திட்ட அறிக்கை – மத்திய அரசு விளக்கம்

புது டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது.  இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் மூன்று மெட்ரோ ரயில் பாதைகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் பூந்தமல்லி பைபாஸ் வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.  இந்த திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்டு செலவு … Read more

இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது: ஒன்றிய விண்வெளித்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக ஒன்றிய விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் அடங்கும் என ஒன்றிய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

'அவர் ஊழியர் அல்ல; எனது பார்ட்னர்' – தொழிலாளிக்கு பென்ஸ் கார் பரிசளித்த கேரள தொழிலதிபர்

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தொழிலாளி ஒருவருக்கு விலைமதிப்பு மிக்க மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசளித்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. கேரளாவில் மிகப்பெரிய டிஜிட்டல் ரீடெய்ல் ஸ்டோரான MyG குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ஷாஜி. இந்த நிறுவனத்தின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் அனிஷ் என்பவர். கடந்த 22 வருடங்களாக அனிஷ், ஷாஜியிடம் பணிபுரிந்துவருகிறார். MyG நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து ஷாஜியுடன் பயணித்து வரும் அனிஷ், அந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங், பராமரிப்பு மற்றும் … Read more

அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இத்தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு திட்டம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது. … Read more

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண் <!– தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கள்ளக்காதலனின் மனைவி, கு… –>

கர்நாடகாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக, கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண்ணை கைது செய்த போலீசார், கூலிப்படையை தேடி வருகின்றனர். கங்காராம் – லட்சுமி தம்பதிக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். ஒரு வாரத்திற்கு முன் லட்சுமியின் அண்ணன் மகனான சிறுவனும் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. விசாரணையில், கங்காராமுக்கு மனைவியின் பெயர் கொண்ட லட்சுமி என்ற வேறொரு பெண்ணுடன் … Read more