ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது: பள்ளிகள் விடுமுறை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு மசூதி, 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து ஷிமோகா, பத்ராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் … Read more

இந்தியர்கள் மீட்பு பணி தொடங்குகிறது <!– இந்தியர்கள் மீட்பு பணி தொடங்குகிறது –>

இந்தியர்கள் மீட்பு பணி தொடங்குகிறது ருமேனியா வந்தடைந்த இந்திய மாணவர்கள் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியர்கள் வெளியேறுகின்றனர் அண்டை நாடான ருமேனியாவுக்கு இந்திய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் ருமேனியாவுக்கு 2 மீட்பு விமானங்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது Source link

பிரசாரத்தை நிறுத்திவிட்டு மாணவர்களை அழைத்து வரும் வழியைப் பாருங்கள்- நானா படோலே

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. போர் எதிரொலியால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மக்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவர்கள் உள்பட இந்தியர்கள் ஏராளமானோர் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரோமானிய மற்றும் … Read more

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடியை விடுவித்தது ஒன்றிய நிதி அமைச்சகம்.!

டெல்லி: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதி அமைச்சகம்  ரூ.267 கோடி விடுவித்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். தமிழகத்தில் ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் நிலுவையில் உள்ள நிதியை ஒன்றிய அரசு விடுத்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு ரூ.267 கோடி விடுவித்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தால் மத்திய … Read more

உ.பி. தேர்தலில் பாஜகவை மிரட்டும் கைவிடப்பட்ட பசுக்கள்: பிரச்சினையை சமாளிக்க பிரதமர், முதல்வர் புதிய அறிவிப்புகள்

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான 7 கட்ட தேர்தலில் 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பசுக்கள் விவகாரம் கிளம்பியுள்ளது. பசுவை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் பசுப் பாதுகாப்பை பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்தியில் பாஜக ஆட்சி 2014-ல் அமைந்தது முதல் வட மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் கொலைகளும் நிகழ்ந்தன. அதேசமயம், கைவிடப்படும் பசுக் களும் பிற மாடுகளும் தங்கள் பயிர்களை மேய்ந்து இழப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் … Read more

பாதுகாப்புத் தளவாட உற்பத்தி – பிரதமர் பெருமிதம் <!– பாதுகாப்புத் தளவாட உற்பத்தி – பிரதமர் பெருமிதம் –>

பாஜக ஆட்சியில் ஏழாண்டுகளில் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கான 350 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட் பற்றிய இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், பிரிட்டிஷ் ஆட்சியிலும், விடுதலைக்குப் பின்னரும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தில் இந்தியா வலிமையாகத் திகழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போர்க் காலத்திலும் ஆயுத உற்பத்தியில் பெரும் பங்காற்றியதாகவும் தெரிவித்தார். பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டில் 70 விழுக்காடு உள்நாட்டில் தளவாட உற்பத்தி, கொள்முதலுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா வலிமையுடன் திகழ்வதாகவும், அதைப் பாதுகாப்புத் … Read more

ஏற்றத்துடன் நிறைவடைந்தது மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை இன்று காலை குறியீட்டு சென்செக்ஸ் 1,264 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. இதனால் பங்குச்சந்தை 55,794 புள்ளிகளில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே 55,299 புள்ளிகள் குறைந்தும், 55,984 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,328.61 புள்ளிகள் அதிகரித்து 55,858.52 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 410.45 புள்ளிகள் அதிகரித்து 16,658.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. கோல் இந்தியா, நிஃப்டி வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் … Read more

உக்ரைன் விவகாரத்தில் 'ரஷ்யாவின் செயல் தவறு; இந்தியா சுட்டிக்காட்டாமல் மவுனம் காப்பது வேதனைக்குரிய விஷயம்': சசிதரூர் பேட்டி

டெல்லி: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை இந்தியா கண்டித்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் அமைதி நிலவ இந்தியா காரணமாக இருப்பது நல்லது தானே என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனில் அப்பாவி மக்கள் உள்பட ராணுவ வீரர்களும் பலியாகி வருகின்றனர். உக்ரைனின் பதில் தாக்குதலால் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பதோடு, ஹெலிகாப்டர்கள், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. இதனால் இருநாடுகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பிற நாடுகளுக்கும் பொருளாதாரம் சார்ந்த … Read more

மாணவி தலைப்பாகையை அகற்ற கல்லூரி வலியுறுத்தல்: சீக்கிய அமைப்பினர் கண்டனம்

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரியில் 12-ம்வகுப்பு படிக்கும் சீக்கிய மாணவிஒருவரை அவரது தலைப்பாகையை அகற்றிவிட்டு கல்லூரிக்கு வருமாறு வலி யுறுத்தப்பட்டது. இதனால் தற்காலிகமாக அந்த மாணவி கல்லூரி செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகம் கூறும் போது, “உயர் நீதிமன்றம் மற்றும்கர்நாடக அரசின் சுற்றறிக்கையின்படி மத ரீதியான உடைகளை மாணவர்கள் அணிந்துவர அனுமதிஇல்லை” என்று தெரிவித்தனர். மாணவியின் தந்தை குர்சரண் சிங், கல்லூரி நிர்வாகத்திடம் அளித்துள்ள … Read more

மாணவர்களுக்கு செம செக் – ஏப். 1 முதல் நேரடி வகுப்புகள்!

வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடைபெறும் என, டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் … Read more