மாணவர்களுக்கு செம செக் – ஏப். 1 முதல் நேரடி வகுப்புகள்!

வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடைபெறும் என, டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் … Read more

நேற்றைய கடும் வீழ்ச்சியில் இருந்து மீட்சி கண்ட இந்திய பங்குச்சந்தைகள் <!– நேற்றைய கடும் வீழ்ச்சியில் இருந்து மீட்சி கண்ட இந்திய பங்… –>

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் நேற்றுக் கடும் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தை இன்று ஓரளவுக்கு மீட்சியடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் எதிரொலியாக நேற்று வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2700 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தை நிப்டி 815 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன. இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதல் பங்குச்சந்தைகள் படிப்படியாகச் சரிவில் இருந்து மீட்சி கண்டன. முற்பகல் 10:48 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1630 புள்ளிகள் உயர்ந்து 56 ஆயிரத்து 160 ஆக இருந்தது. … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் முழு பயணச் செலவையும் அரசே ஏற்கும்- தெலுங்கானா அமைச்சர்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. சரமாரியாக குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகம், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தமிழகம் திரும்பும் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பயணச் செலவை ஒன்றிய அரசே ஏற்கும் என தகவல்

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான விமான பயண செலவை ஒன்றிய அரசே ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை விமானம் மூலம் மீட்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது.

திருப்பதிக்கு வயது 892: பெயர் சூட்டியது ராமானுஜர்- திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர் தகவல்

திருப்பதி நகருக்கு வயது 892. இதனையொட்டி, நேற்று திருப்பதி உதயமான நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வைணவ ஆச்சாரியரான ராமானுஜர் கி.பி 1130-ம் ஆண்டில் திருப்பதி வந்தபோது, கோவிந்தராஜ புரமாக இருந்த ஊர், திருப்பதி என பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சில கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்த பின்னர், திருப்பதி நகரம் உருவாகி 892 ஆண்டுகள் ஆனதாக தெரிய வந்ததால், நேற்று திருப்பதி நகரம் உதய தினத்தை திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி தலைமையில் விழாவாக … Read more

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய ராணுவத்தினர் தீவிரம் <!– ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கித… –>

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பனியில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர். இடைவிடாது பெய்து வரும் பனிப்பொழிவால் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில், சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பனிமூடிய சாலைகளுக்கு மத்தியில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் நவ்யுக் சுரங்கப்பாதையில் சிக்கியது. பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை போலீசார் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.   Source link

பிட்காயின்ஸ் மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்

கெயின்பிட்காயின் ஊழல் வழக்கில் பரத்வாஜ் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்த ஊழல் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அஜரான கூடுதல் சொலிசிட்டி ஜெனரல் பாதி, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். அப்போது, பிட்காயின்ஸ் சட்ட விரோதமா? இல்லையா? என கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி?

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவின் தலைநகர் புக்ரெஸ்ட் வழியாக இந்தியர்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் எஸ்டிபிஐ, பிஎப்ஐ-க்கு தடை கோரி போராட்டம்

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப் பட்டார். இதன் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினர் இருப்பதாக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் எஸ்டிபிஐ, பிஎப்ஐ ஆகிய‌ அமைப்பினர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். … Read more

இந்தியாவில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 13 ஆயிரத்து 166 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 302 பேர் உயிரிழந்த நிலையில், 26 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 28 சதவீதமாக உள்ளதுடன், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 235 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link