போரை உடனே நிறுத்துங்கள்… ரஷிய அதிபர் புதினிடம் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.  ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று … Read more

ரஷ்ய அதிபர் புடினுடன் சற்று நேரத்தில் பேச உள்ளார் இந்திய பிரதமர்: வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி

டெல்லி: ரஷ்ய அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் பேச உள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக தூதரகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 20,000 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா கூறினார். 

கிராமப்புற மேம்பாட்டுக்கு நிதிப்பற்றாக்குறை கிடையாது: பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

புதுடெல்லி: கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கிராமப்புற பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக காணொலி மூலம் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கிராமப்புறங்களை உள்ளடக்கிய திட்ட செயல்பாட்டுக்கென புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுக்க … Read more

ரஷ்ய அதிபருடன் இன்றிரவு பேசும் பிரதமர் மோடி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போர் நின்ற பிறகே விமானங்களை இயக்குவது பற்றி முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, … Read more

பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை <!– பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் ந… –>

பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ஆலோசனை என தகவல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு Source link

புயலால் கவிழ்ந்த படகு- 16 பேரைக் காணவில்லை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்தரா மாவட்டத்தில் பயணிகளுடன் நதியில் சென்ற படகு இன்று விபத்துக்குள்ளானது. நிர்சாவில் இருந்து ஜாம்தரா நோக்கி சென்றுகொண்டிருந்த படகு, பார்பெண்டியா பாலம் அருகே சென்றபோது, கடுமையான புயல் காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 16 … Read more

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆகியோர் பிரதமர் உடனான ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்துக்கான கோரிக்கை – நிர்மலா சீதாராமனை சந்தித்த பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த பழனிவேல் தியாகராஜன் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்பட்டால் அந்த தொகைகளை தமிழக அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் சேர்க்க முடியும் என தெரிவித்தார். இந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்படவில்லையானால், அந்த தொகைகளை அடுத்த … Read more

‘‘புதினிடம் பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும்; ஆதரவு தாருங்கள்’’- உக்ரைன் தூதர் உருக்கம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்களிடம் செல்வாக்கு உள்ளது, அவர் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், உக்ரைனுக்கு அவர் ஆதரவு தர வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் இன்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் … Read more

ரஷ்யா தொடுத்த போர்: உக்ரைனில் இந்தியர்களின் நிலை என்ன?

உக்ரைனில் ரஷ்யா தொடுத்திருக்கும் போர் உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உக்ரைன் – ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. முன்னதாக, உக்ரைனில் உள்ள தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தன. அந்த வகையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு, … Read more