பர்தா விவகாரம்.. கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல.. உள்துறை அமைச்சர் தகவல்..!

கர்நாடகாவில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொகா, பாகல் கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதை தொடர்ந்து, 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பர்தா விவகாரம் குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பர்தா விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல. கர்நாடகாவில் … Read more

பள்ளி வளாகத்தில் ’ஜெய் ஸ்ரீராம்’, ’அல்லாஹ் அக்பர்’ கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது: கர்நாடக அமைச்சர் காட்டம்

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்றோ, ‘அல்லாஹ் அக்பர்‘ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துவிட முடியாது. எந்தத் தவறான செயலையும் அரசு விட்டுவைக்காது. மாண்டியாவில் அந்த மாணவி வரும்போது எந்த மாணவர்களும் அவரை சுற்றி வளைக்கவில்லை. எந்த மாணவர்களும் அவர் அருகில் செல்லவில்லை. ’ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ’அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் … Read more

3 நாட்கள் சிறப்பு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க வசதியாக அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஒடிசா மாநிலத்தில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஐந்து கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஐந்தாவது கட்ட தேர்தல், 24 ஆம் தேதி நடைபெற … Read more

உ.பி. தேர்தல் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக  சட்டசபை தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி … Read more

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 655 என்கவுன்டர்கள்; தமிழகத்தில் மட்டும் 14: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 655 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 14 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை காவல்துறை செய்த என்கவுன்டர்களின் எண்ணிக்கை குறித்தும், என்கவுன்டர்களுக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து வரும் வழக்குகள் குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சக இணையமைச்சர் நித்யானந்த ராய், தேசிய … Read more

’10 நாட்களில் விவசாயக் கடன் ரத்து’ – உ.பி.யில் 3-வது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரியங்கா வாக்குறுதி

லக்னோ: உத்தரப் பிரதேசத் தேர்தலையொட்டி காங்கிரஸின் மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரியங்கா காந்தி, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரியங்கா காந்தி பேசியது: “நாங்கள் இதுவரை மூன்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். ஒன்று பெண்களுக்கானது, இரண்டாவது இளைஞர்களுக்கானது. இதோ இப்போது மூன்றாவது அறிக்கையை வெளியிட்டுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும்தான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மாநிலத்தில் 20 லட்சம் … Read more

"நான்சென்ஸ்.. இப்படித்தான் ஒரு பெண்ணை வரவேற்பீர்களா?".. பொங்கி எழுந்த சாந்திஸ்ரீ

நான் டிவிட்டரிலேயே கிடையாது. என்னைப் பற்றி டிவிட்டரில் பேசப்படுபவை முட்டாள்தனமானவை. ஒரு பெண்ணை இப்படித்தான் வரவேற்பீர்களா என்று காட்டமாக கேட்டுள்ளார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ துலிபடி பண்டிட் . டெல்லியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சாந்திஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் பேசு பொருளானது. காரணம், இவரது பெயரில் உள்ள டிவிட்டர் தளத்தில், பலமுறை இந்துத்வா ஆதரவுக் கருத்துக்களை இவர் பதிவு செய்திருந்தார். விவசாயிகள் … Read more

சூப்பர்மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு.. போராட்டத்தில் குதிக்கிறார் அன்னா ஹசாரே.. <!– சூப்பர்மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்க மகாராஷ்டிர… –>

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவைக் கண்டித்து பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகச் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்ததற்கு ஏற்கெனவே அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்தார். இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.  … Read more

காஷ்மீரில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதி கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய எ.ஜி.எச். என்ற இயக்கத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தவ்கீத் அகமது ஷா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவிர லக்னோ நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதி தவ்கீத் அகமது ஷாவை தேசிய புலனாய்வு … Read more

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை!: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஒன்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவிய காலகட்டத்தில் வேலை இழப்பும் அதிகரித்தது. வேலை போய்விடுமோ என்ற கவலையில் பலரும் தற்கொலை செய்துகொண்டனர். கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் பல மூடியதன் காரணமாக பலரும் வேலை கிடைக்காமல் தள்ளாடினர். இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற … Read more