'ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமர் மோடி கூறினால் கேட்பார்': உக்ரைன் தூதர் இகோர் பேட்டி

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை நிறுத்த அதிபர் புதனுடன் பேசுமாறு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்புடன் கூட்டு சேர கூடாது என ரஷ்யா பல காலமாக உக்ரைனை எச்சரித்து வந்தது. ஆனால் உக்ரைன் அடிபணியவில்லை. நேட்டோ அமைப்புடன் இணைவதில் தீர்க்கமாக இருந்தது. அதேபோல அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை குற்றஞ்சாட்டியது. ஒரு கட்டத்தில் மோதல் முற்றவே உக்ரைன் எல்லைகளில் ரஷ்யா போருக்கான … Read more

'இந்தியா ரஷ்யாவிடம் பேச வேண்டும்!' – உக்ரைன் தூதர் கோரிக்கை

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த பிரதமர் மோடி தலையீட வேண்டும் என்று தெரிவித்துள்ள இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, இந்த பிரச்னை தீர்க்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”ரஷ்யாவுடன் இந்தியா சிறந்த நல்லுறவை பேணி வருகிறது. தற்போது உக்ரைனில் நிலவும் சூழலை கட்டுப்படுத்த இந்தியா தலையிட வேண்டும். இது தொடர்பாக … Read more

வீட்டுப் பணியாளர், உதவியாளர், டிரைவருக்கு ரூ.3.95 கோடி ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி பங்குகள் பரிசு: நிர்வாக இயக்குநர், சிஇஓ வைத்யநாதன் தகவல்

புதுடெல்லி: தனது கார் டிரைவர், வீட்டுப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு 9 லட்சம் பங்குகளை பரிசாக அளிப்பதாக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி. வைத்யநாதன் தெரிவித்துள்ளார். தனது பயிற்சியாளருக்கு 3 லட்சம் பங்குகளும், வீட்டுப் பணியாளர் மற்றும் டிரைவருக்கு தலா 2 லட்சம் பங்குகளும், அலுவலக உதவியாளர் மற்றும் வீட்டு உதவியாளருக்கு தலா ஒரு லட்சம் பங்குகளும் பரிசாக அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 9 லட்சம் … Read more

உக்ரைன் ரஷ்யா போர்: போன் போட்டா எடுக்க மாட்றாங்க – மாணவர்கள் குற்றச்சாட்டு!

உக்ரைன் மீடு ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டில் இருந்து நாடு திரும்ப விரும்புவோருக்கான சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்தது. அதன்படி, … Read more

நடுநிலை காக்கும் இந்தியா.. அமைதி ஏற்படும் என நம்பிக்கை..! <!– நடுநிலை காக்கும் இந்தியா.. அமைதி ஏற்படும் என நம்பிக்கை..! –>

உக்ரைன் – ரஷ்யா விவகாரம் கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் நடுநிலை காப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்து. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக் குறித்துச் செய்தியாளர்களின் வினாவுக்கு வெளியுறவு இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பதிலளித்தார். அப்போது உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை காப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சிக்கலுக்கு அமைதியான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.  இது குறித்து நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசிய இந்திய … Read more

அதிகாலை முதல் குண்டு மழை பொழிந்தபடி உள்ளது- உக்ரைனுக்கு படிக்க சென்ற கேரள மாணவர்கள் தகவல்

கேரளாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் தங்கி உயர் கல்வி படித்து வருகிறார்கள். அங்கு போர் பதட்டம் ஏற்பட்டதும் அவர்களில் பலர் ஊர் திரும்பினர். ஆனால் இன்னும் பல மாணவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்று கேரளா வந்த தங்களின் நண்பர்களை தொடர்பு கொண்டு உக்ரைன் போர் நிலவரம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதன்விபரம் வருமாறு:- உக்ரைன் எல்லையில் வசிக்கும் கேரள மாணவர்கள் எங்களை தொடர்பு கொண்டு போர் தொடங்கி விட்ட … Read more

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த நாகை, காரைக்கால் மீனவர்களுக்கு மார்ச் 10-ம் தேதி வரை சிறை: ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த நாகை, காரைக்கால் மீனவர்களுக்கு மார்ச் 10-ம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 22 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல் போன தெரு நாய் – திரும்ப கிடைத்ததால் மலர்தூவி உற்சாக வரவேற்பு ; வைரல் வீடியோ

மும்பை அருகே காணாமல்போன தெரு நாய் திரும்பி வந்ததையடுத்து, அதற்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர். மும்பையில் பிரபாதேவி பகுதியில் வசித்துவந்த ஆதரவற்ற நாய் ஒன்றுக்கு அப்பகுதி மக்கள் விஸ்கி என செல்லப் பெயரிட்டு ஆதரவு கொடுத்து வந்தனர். அங்குள்ள அனைவரிடமும் அன்பாக பழகிவந்த விஸ்கி கடந்த எட்டாம் தேதி காணாமல் போயுள்ளது. இதனால் மனமுடைந்த அப்பகுதி மக்கள் மிஸ்ஸான விஸ்கியை வெகுவாக மிஸ் செய்தனர். ஆனால் எப்படியோ 7 நாட்களுக்குப் பிறகு வில்சன் கல்லூரி அருகே விஸ்கி இருப்பதைப் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் | மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா அச்சம்

ஜெனீவா: “ரஷ்யா – உக்ரைன் மோதல், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்“ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று கூடியது. ஒரே வாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரண்டாவது முறையாக கூடியது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தை தணிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டபோதே … Read more

எங்களுக்காக ரஷ்யா கிட்ட பேசுங்க: உக்ரைனுக்கு இந்தியா சொன்ன பதில்!

உக்ரைன் ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் நுழைய தொடங்கியுள்ளன. உக்ரைனின் எண்ணெய் கிணறுகள், ராணுவத் தளங்களை குறி வைத்து ரஷ்யா விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷ்ய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது … Read more