படிப்பா முக்கியம்.. "காவி"க்கு எதிராக களம் குதித்த "நீலம்".. கலர் கலராக போராடும் மாணவர்கள்!

கர்நாடக கல்லூரி மாணவர்கள் படிப்பைத் தூக்கி 2வது இடத்தில் வைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக காவி அணிந்து போராடும் இந்து மாணவர்களுக்கு எதிராக நீலத் துண்டு அணிந்து தலித் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான போராட்டங்கள் வெடித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியைச் சேர்ந்த பைந்தூர் அரசு பியூசி கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து … Read more

குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்தும் ஏற்க ஓவைசி மறுப்பு – அமித்ஷா தகவல் <!– குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்த… –>

ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசிக்குக் குண்டு துளைக்காத காரும், இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்க அரசு முன்வந்தும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஓவைசியின் கார் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமித் ஷா, தனது பயணம் பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஓவைசி முன்கூட்டித் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவரைக் கைது செய்து 2 கைத்துப்பாக்கிகள், ஒரு கார் ஆகியவற்றைப் … Read more

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் திமுக முயற்சிக்கு மெகபூபா முப்தி ஆதரவு

ஸ்ரீநகர்: தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இக்கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க உள்பட 34 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தி.மு.க. … Read more

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் விவகாரம்; சிபிசிஐடி விசாரணை நிலை குறித்த அறிக்கை தர உத்தரவு

புதுடெல்லி: வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில் விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிபிசிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார்(24). இவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் … Read more

‘‘போலி சோசலிஸ்ட்டுகள்’’- தேர்தல் பிரச்சாரத்தில் சமாஜ்வாதி கட்சி மீது பிரதமர் மோடி கடும் சாடல்

பிஜ்னோர்: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி என்பது போலி சமாஜ்வாதிகள் (சோசலிஸ்ட்டுகள்) மற்றும் அவர்களின் நெருங்கியவர்களுடன் நின்று போனது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, இந்த ஏழு கட்ட தேர்தலிலும் நேரடிப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சிறிய குழுக்களுடன் வாக்காளர்களின் வீடு வாசலில் சந்தித்து வாக்கு சேகரிக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் … Read more

அசாதுதீன் ஓவைசி மீது தாக்குதல் – பார்லி.,யில் அமித் ஷா விளக்கம்!

அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, கடந்த வியாழக்கிழமை அன்று, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, டெல்லி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, சாஜர்சி சுங்கச்சாவடி அருகே, அவரது கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக அசாதுதீன் ஓவைசி காயமின்றி உயிர் … Read more

விதிகளை மீறிக் கட்டப்பட்ட 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம்.. 2 வாரங்களுக்குள் இடித்து நொறுக்க மீண்டும் அறிவுறுத்தல் <!– விதிகளை மீறிக் கட்டப்பட்ட 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம… –>

டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட நாற்பது மாடிகள் கொண்ட இரட்டைக் கோபுரக் கட்டடங்களை இரண்டு வாரங்களுக்குள் இடித்து நொறுக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. சூப்பர்டெக் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் விதிகளை மீறிக் கட்டிய கட்டடத்தை இடித்து நொறுக்கக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடுகளை வாங்க ஏற்கெனவே பணம் செலுத்தியோருக்கு ஆண்டுக்கு 12 விழுக்காடு வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்த … Read more

பிரதமரின் மோடியின் கருத்து அப்பட்டமான பொய் – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி:  நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி,கொரோனா முதல் அலையின் போது புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தூண்டி விட்டதாகவும், மேலும் அந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக ரெயில் டிக்கெட்டுகளை வழங்கியது என்றும் தெரிவித்திருந்தார்.  அதேபோல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லியை விட்டு செல்லலாம், அதற்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என டெல்லி அரசு கூறியதாகவும் பிரதமர் … Read more

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச … Read more

திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்க தயக்கம் ஏன்? – ஒரு விரைவுப் பார்வை

“திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – இது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்து. இவர் மட்டுமல்ல பல்வேறு கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் மத்திய அரசு, திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் … Read more