தரிசன டிக்கெட் இல்லாமல் சென்றதால் தடுத்து நிறுத்தம்- மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி விழாவை காண திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு திருப்பதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரத சப்தமி விழா நடைபெறுகிறது. ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிப்பார். மினி பிரம்மோற்சவமான இதனை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். கொரோனா விதிமுறையால் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியின்றி ரதசப்தமி விழா … Read more

'இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் சொத்து வாங்கமாட்டேன்'!: பஞ்சாப் காங். முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் அறிவிப்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை என்றும் எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.1 17 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்‍கான தேர்தல் வரும் 20ம் தேதி … Read more

யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவம் ஆகிவிடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சனம்

நாக்பூர்: யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவக் கொள்கை ஆகிவிடாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். இந்துத்துவமும் தேசிய ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் லோக்மத் மீடியா ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். நாக்பூர் லோக்மத் பத்திரிகை பொன்விழா கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்ம சன்சத் என்ற தலைப்பில் நடந்த இந்து மாநாட்டில் பேசப்பட்ட சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன. அவை … Read more

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் – வெளியானது செம அறிவிப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், பத்தினம்திட்டா மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துச் செல்வர். தற்போது கொரோனா காலக் கட்டம் என்பதால், கோவிலுக்கு … Read more

டெல்லியில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்! <!– டெல்லியில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. மகிழ்… –>

டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்துப் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி மாணவர்கள் இன்று மீண்டும் பள்ளிகளுக்குச் சென்றனர். மழலையர்ப் பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் எனத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் … Read more

குண்டாப்பூர் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி

குண்டாப்பூர்: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக, இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்தும், இந்து மாணவிகள் காவி சால்வை அணிந்தும் கல்லூரிக்கு வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசுக் கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்ததையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் … Read more

ஆந்திராவில் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் அறிவித்தார் பிரதமர் மோடி!!

ஹைதரபாத் :  ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் உருவகொண்டா அருகே திருமண நிகழ்வில் கலந்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தவர்களின் இன்னோவா கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ … Read more

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்டான #BoycottHyundai: ஹூண்டாய் மோட்டார் இந்தியா விளக்கம்

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது. இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை நல்கியுள்ளது. அந்த விளக்க … Read more

சித்து கனவை காலில் போட்டு மிதித்த காங்கிரஸ்.. சென்னிக்கு ஏன் பச்சைக் கொடி?

முதல்வர் பதவிக்காக ஆவலோடு காத்திருந்தார் நவ்ஜோத் சிங் சித்து . ஆனால் அவரை ஓரம் தள்ளி விட்டு விட்டு தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சென்னியையே முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது சித்து ஆதரவாளர்களை அதிர வைத்துள்ளது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் கலக்கி வருகின்றன. இந்த வரிசையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. … Read more

இந்தியாவில் லட்சத்திற்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு.! <!– இந்தியாவில் லட்சத்திற்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பா… –>

இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்து 83 ஆயிரத்து 876 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 895  பேர் உயிரிழந்துள்ளதுடன் 1 லட்சத்து 99 ஆயிரத்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு வீதம் 7 புள்ளி 25 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 11 லட்சத்து 8 ஆயிரத்து 938 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link