பஞ்சாப் தேர்தல் – காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் … Read more

லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் <!– லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் –>

மும்பையில் காலமான பாடகி லதா மங்கேஸ்கரின் உடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சிவாஜி பார்க் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.  பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் … Read more

ஆந்திராவில் சோகம் – கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணாமுல் எம்பி மன்னிப்பு கேட்க வேண்டும்: முன்னாள் எம்பி கண்டனம்

அகமதாபாத்: மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணாமுல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் எம்பி கோரியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, கடந்த 3ம் தேதி மக்களவையில் பேசும்போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் தெருக்களில் அசைவ உணவுகள் விற்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும், ஜெயின் சமூகம் குறித்தும் பேசினார். இவரது பேச்சு ெபரும் சர்ச்சை பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில், சகல் ஜெயின் சமாஜ் அமைப்பின் தலைவரும், முன்னாள் … Read more

பாடகர் லதா மங்கேஷ்கருக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பைக்கு செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் … Read more

அரசு ஊழியர்களுக்கு செம செக் – அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்து உள்ளார். ஒமைக்ரான் தொற்று காரணமாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மத்திய அரசு அலுவலகங்களில், ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் … Read more

செல்போன் தயாரிப்பில் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் <!– செல்போன் தயாரிப்பில் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் … –>

செல்போன் தயாரிப்பில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் முதன்மை நாடாக உருவெடுக்கும் என மத்திய தொலைத்தொடர்பு, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே உள்ள 200 செல்போன் தயாரிப்பு மையங்கள் மூலம் உலகின் 2-ஆவது அதிக செல்போன் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளதாக கூறிய அமைச்சர், தற்போது அதன் சந்தை மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதெனவும், இந்த துறை 22 லட்சம் வேலை … Read more

மணற்சிற்பம் உருவாக்கி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

புவனேஷ்வர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92), சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். … Read more

தேர்தல் ரிசல்ட் நாளான மார்ச் 7ம் தேதி மோடியையும், யோகியையும் அடக்கம் செய்வோம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங். வேட்பாளர் மீது தேசதுரோக வழக்கு

லக்னோ: வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 7ம் தேதி மோடியையும், யோகியையும் அடக்கம் செய்வோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிந்த்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய் ராய் என்பவர் போட்டியிடுகிறார். அவர் ராஜேதாரா கிராமத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது, தேர்தல் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காங்கிரஸ் … Read more

விடைபெற்றார் லதா மங்கேஷ்கர் – அரசு மரியாதையுடன் உடல் தகனம் | பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

மும்பை: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள் ஷாருக்கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். … Read more