கோவாவில் நாளை தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

பனாஜி: சின்னஞ்சிறிய மாநிலமான கோவாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா தேர்தலில் மொத்தம் 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். … Read more

பெரும்பான்மை அடிப்படைவாதமும் சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றா?

அந்த முஸ்லிம் நண்பர் ஐ.டி.துறை ஒன்றில் வேலை செய்கிறார். அலுவலகத்திற்கு அருகில் வாடகை வீடு தேடுகிறார். தரகர் ஒருவர் மூலம் ஒரு வீடு கிடைக்கிறது. அவர் மூலம் வீட்டு உரிமையாளரிடம் பேசி ஒப்பந்தம் போட்டு பழைய வீட்டிலிருந்து பொருட்களை சிறு லாரியில் ஏற்றி புதிய வீடு வந்து சேர்கிறார். அப்போதுதான் அவரது மனைவி புர்கா அணிந்திருப்பதைக் கண்ட வீட்டு உரிமையாளர் முஸ்லிம்களுக்கு வீடு கிடையாது, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கிளம்புங்கள் என்கிறார். முஸ்லிம் நண்பரோ நியாயமாக … Read more

டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு முறையீடு தள்ளுபடி <!– டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அ… –>

டெல்லியில் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய முறையீட்டை ஏற்கத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. டெல்லியில் காற்று மாசடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுக்கு மேல் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசு செய்த முறையீட்டை ஏற்கெனவே தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. ஒரு டீசல் வாகனம் வெளியிடும் மாசு, 24 பெட்ரோல் … Read more

ஒடிசா பஞ்சாயத்து தேர்தல்: வேட்பாளர்களுக்கு பரீட்சை வைத்த கிராம மக்கள்

புவனேஸ்வர்: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள குத்ரா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த பதவிக்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய அவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 9 வேட்பாளர்களில் 8 பேர் தேர்வை எழுத ஒப்புக் கொண்டனர். அதன்படி அவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு 7 கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களுக்கு பதில் அளிக்க 30 … Read more

பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்: PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல்

அமராவதி: பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-04 செயற்கைக்கோள் PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு சதிஷ் தவான் தளத்தில் இருந்து செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு 44,877 ஆக குறைவு: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5.37 லட்சமாக சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 44,877 என்றளவில் உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5,37,045 ஆக சரிவடைந்துள்ளது. நாடுமுழுவதும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமலாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: கடந்த 24 … Read more

ஹிஜாப் பிரச்சினை: உலக நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஒன்றை கர்நாடக உயர் … Read more

சுரங்கம் தோண்டும் போது மண் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் 7 பேர் உயிருடன் மீட்பு <!– சுரங்கம் தோண்டும் போது மண் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்க… –>

மத்தியப் பிரதேசத்தில் கால்வாய்ப் பணிக்காகச் சுரங்கம் தோண்டியபோது மண் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கத்னி மாவட்டத்தில் சிலீமனாபாத் என்னுமிடத்தில் கால்வாய்த் திட்டத்துக்காகச் சுரங்கம் தோண்டும்போது மண் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மண்ணை அகற்றி 7 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் இருவரை மீட்கும் பணிகள் … Read more

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது

புதுடெல்லி: பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் செப்டம்பர் 10-ந் தேதி இணைக்கப்பட்டன. 2-வது கட்டத்தில் 3 … Read more

மத்தியப் பிரதேசத்தில் மண் சரிவில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: 7 பேரை மீட்ட பேரிடர் மீப்புக்குழு; இதர 2 பேரை மீட்க முயற்சி

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாதாள கால்வாய் திட்ட கட்டுமான பணி நடந்த போது மண் சரிவு ஏற்பட்டு 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 பேரின் கதி தெரியவில்லை. கட்னி மாவட்டத்தில் உள்ள நர்மதா நதியின் வலது கரையில் பாதாள கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மாலை தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவு ஏற்பட்டு பாதாள கால்வாய் … Read more