அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 10 … Read more

முகக் கவசம் அணிவதில் விலக்கு? அறிக்கை தர தொற்று தடுப்பு குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்? <!– முகக் கவசம் அணிவதில் விலக்கு? அறிக்கை தர தொற்று தடுப்பு க… –>

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருந்தார். இது குறித்து தகவல் அளிக்க மத்திய, மாநில அரசுகளின் தொற்று தடுப்பு குழுவை கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த … Read more

கோவா சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நிறைவு – நாளை வாக்குப் பதிவு

பனாஜி: கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து அங்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கோவா சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இந்த முறை 332வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். உத்தர பிரதேச சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக 58 தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் … Read more

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். … Read more

திடீரென மேற்குவங்க சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்த ஆளுநர் ஜக்தீப்!

மேற்கு வங்கத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, திடீரென சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்ததால் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதேநேரத்தில், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்தது. இந்த நிலையில் ஆளுநர் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், அரசமைப்பு சட்டம் 174-ன் படி, தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு … Read more

‘‘உள்விவகாரம்’’- ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து … Read more

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தெலங்கானா மாநிலம் ஜான்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடமை உணர்ச்சி காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்காக அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுடன் … Read more

"ராம்ராஜ் காட்டன்" நிறுவனத்தின் விளம்பரத் தூதராக யாஷ் நியமனம்.! <!– &quot;ராம்ராஜ் காட்டன்&quot; நிறுவனத்தின் விளம்பரத் தூதராக யாஷ் நிய… –>

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரப் பிரதிநிதியாக பிரபல கன்னட திரைப்பட கதாநாயகன் யாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்த முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் காட்டன், வேட்டிகள், சட்டைகள் மற்றும் உள்ளாடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. கே.ஜி.எஃப் திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த யாஷ், ராம்ராஜ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். Source link

தொழிலாளர்களின் நலனில் மோடி அரசு அக்கறை கொண்டுள்ளது – மத்திய மந்திரி உறுதி

குர்கிராம்: குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ.சி) கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் பேசியதாவது: காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அடிப்படையில் நாட்டில்வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழி லாளர்களின் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தொழிலாளர்களின் தொடர் உடல்நலப் பரிசோதனைக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் ஒருங் கிணைக்கப்படும். மொத்தம் 15 நகரங்களில் பரிசோதனை முறையில் … Read more

ஐபிஎல் ஏலம் விஷயத்தில் பிரீத்தி ஜிந்தா முடிவால் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 97 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் இருந்தன. அவற்றை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரர்கள் களம் கண்டனர். அவர்களில் 227 பேர் வெளிநாட்டு வீரர்கள். அனைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர்.அவர்களில் … Read more