இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம்: சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்கிறது

புதுடெல்லி: சிங்கப்பூரில் விமான கண்காட்சி -2022-ல் இலகு ரக தேஜஸ் போர் விமானம் பங்கேற்கிறது. விமானப்படையை மேலும் பலப்படுத்தும் வகையில் நவீன தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம் கடந்த ஆண்டு விமானப்படையில் இணைக்கப்பட்டது. தேஜஸ் ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கூடுதல் சிறப்பு அம்சங்கள், தாக்குதல், கண்காணிப்பு திறன் கொண்டவை. இந்த இலகு ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கப்படுகிறது. … Read more

'இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் உ.பி., தான்!' – சொல்கிறார் யோகி ஆதித்யநாத்!

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான் என, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக, கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று பேரை முதலமைச்சராக பதவி அமர்த்தி … Read more

ஹிஜாப் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்தை தெரிவிக்க வேண்டாம் – மத்திய அரசு <!– ஹிஜாப் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்தை தெரிவிக்க வேண்டா… –>

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, கர்நாடகாவின் சில கல்வி நிறுவனங்களில் நிலவிய சீருடை தொடர்பான பிரச்சனை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு, வழிமுறைகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். … Read more

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்

மும்பை:  பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார் (83). அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் இருந்த போது அவரது உயிர் பிரிந்ததாக பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார். இதையும் படியுங்கள்…முகக்கவசம் என்பது காரில் சீட் பெல்ட் அணிவதற்கு சமமானது- சுகாதார நிபுணர்கள் கருத்து

பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைத்து சென்னைக்கு புல்லட் ரயில்; ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், ‘டெல்லி – வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்க ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை – … Read more

முற்றுகிறது மம்தா பானர்ஜி – அபிஷேக் பானர்ஜி மோதல் : ஐபேக் தலையீடு காரணமா? – ஓர் பார்வை

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மைத்துனர் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையேயான மோதல் முற்றி வரும் சூழலில், அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு அடுத்தப்படியாக அதிக அதிகாரம் கொண்ட தலைவராக வலம் வருபவர் அபிஷேக் பானர்ஜி. மம்தாவின் மைத்துனரான இவர், அக்கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மம்தா பானர்ஜியின் ஆலோசனைகளை கேட்டு அப்படியே செயல்படுத்தி வந்த அபிஷேக் பானர்ஜி, சமீபகாலமாக தன்னிச்சையாக முடிவுகளை … Read more

சென்னையில் பல்லி பிரியாணி.. ஆர்டர் செய்து சாப்பிட்ட அப்பாஸ் ஆஸ்பத்திரியில் அட்மிட்..!

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், “ஒரு வேலையாக புரசைவாக்கம் வந்தேன். மதியம், அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். … Read more

ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு எடுத்து பஞ்சாப் அணி..!

15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் … Read more

2 தொழிலதிபர்களுக்காக நாட்டின் கொள்கைகளை வகுக்கும் பிரதமர் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

டேராடூன்: பிரதமர் மோடியின் நண்பர்களான இரண்டு தொழிலதிபர்களுக்காகவே ஒட்டுமொத்த நாட்டின் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னணி ஊடகங்கள் நடத்திய … Read more

கர்நாடகத்து பசவன கெளடாவுக்கு "கை" கொடுத்த.. கேரளா.. செம சம்பவம்!

கர்நாடகத்தில் நடந்த அரிசி மில் ஆலை விபத்தில் இரு கைகளையும் பறி கொடுத்தார் 34 வயதான பசவன கெளடா. அவருக்கு தற்போது கேரள மருத்துவமனையில் கை மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. அவருக்குப் புது வாழ்வும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி மூளைச்சாவடைந்த கோட்டயத்தைச் சேர்ந்த நெவிஸ் சஜன் மாத்யூ என்ற இளைஞரின் கைகளைத்தான் தற்போது பசவன கெளடாவுக்குப் பொருத்தியுள்ளனர் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனை டாக்டர்கள் குழு. மிகவும் கடினமான … Read more