இந்தியர்களை மீட்க ரஷ்யா உதவி: பேருந்துகள் தயார்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. … Read more

உக்ரைன் நிலவரம் – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை <!– உக்ரைன் நிலவரம் – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை –>

உக்ரைன் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெய்சங்கர், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். உக்ரைனில் உள்ள … Read more

ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்ஜீவ் கபூர் நியமனம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்ஜீவ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் பொறுப்பு ஏற்கிறார். இதுகுறித்து ஜலான்-கல்ராக்கின் முன்னணி பங்குதாரர் முராரி லால் ஜலான் கூறுகையில், ” மனித மூலதனத்தில் முதலீடு செய்வதை நான் எப்போதும் நம்புகிறேன். சஞ்ஜீவ் கபூர் ஒரு அனுபவமிக்க விமானப் பணியாளர். சஞ்ஜீவ் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், விபுலா சிஎஃப்ஓவாகவும் இருப்பதன் மூலம், ஜெட் ஏர்வேஸ் இழந்த அதன் பெருமையை மீட்டெடுக்கும். … Read more

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில் அனைத்து ஒப்புதல்களையும் பெற்று அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி ஏற்றுமதி பாதிப்பு

புதுடெல்லி: கரோனா தடுப்பூசி மருந்துகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்தும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. தற்போது ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை சர்வதேச சமூகம் விதித்துள்ளது. இதனால் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்புட்னிக் மருந்தை தயாரிக்கும் ரஷ்யாவின் ஆர்டிஐஎப் நிறுவனம் இந்தியாவில் இம்மருந்தைத் தயாரிக்க உரிமம் வழங்கியுள்ளது. பொருளாதார தடை காரணமாக இந்தியாவில் சுமார் 12 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் தேக்கமடைந்துள்ளதாக … Read more

இந்தியாவில் புதிதாக 6,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் புதிதாக 6,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து  6 ஆயிரத்து 396 ஆக பதிவாகி உள்ளது.  24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 201 பேர் உயிரிழந்த நிலையில், 13 ஆயிரத்து 450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 69 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 69 ஆயிரத்து 897 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

நிலையான எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மட்டுமே நிலையான வளர்ச்சி சாத்தியம் – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: உலகிற்காக இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய நிலைமை குறித்து பிரதமர் மோடி இன்று இணையதளம் மூலம் பேசியதாவது: வரும் ஆண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவைகள் அதிகரிக்கும். எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாம் மாற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் 15 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவும் வகையில் நாம் சொந்தமாக சூரிய மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது தனித்துவமாக மட்டும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். 2030 ஆண்டிற்குள், இந்தியா தனது … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டம்

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்கிவ், சுமியின் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து டெல்லி திரும்பினாலும் இயல்புநிலைக்கு திரும்பாத மாணவர்கள்: ஜூனியர்களை முதலில் அனுப்பும் தமிழக மாணவர்கள்

புதுடெல்லி: உக்ரைன் நாட்டின் கீவ், கார்கிவ்நகரங்களில் உள்ள பாதாள அறைகளில் தஞ்சம் அடைந்திருந்த இந்திய மாணவர்கள், டெல்லிதிரும்பிய பிறகும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தமிழகத்தைச்சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் முதலில் அனுப்பி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து உக்ரைனின் உஸ்குரோத் தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஒசூர் மாணவர் வாஜித் அகமது கூறும்போது, “இந்திய மாணவர்களை 200-250 பேர் கொண்ட குழுக்களாக பல்கலைக்கழக நிர்வாகம் தாயகம்அனுப்பி வருகிறது. இந்த குழுக்களில் … Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர் <!– ஓடும் ரயிலில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இ… –>

குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்தில் வேகமாக சென்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர்  அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், ரயில்நிலையத்தில் இருந்து அந்த ரயில் மெதுவாக கிளம்பி பின்னர் படிப்படியாக வேகம் எடுத்துச் செல்வது பதிவாகி உள்ளது. அப்போது அந்த ரயிலில் இருந்து பயணி ஒருவர் இறங்க முற்படுகையில் தவறி விழுந்து இழுத்து செல்லப்படும் நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த ரயில்வே கார்டு உடனடியாக ரயிலை பிரேக் போட்டு நிறுத்தியதால் … Read more