உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி <!– உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை சந்தித்தார் பி… –>
உக்ரைனில் இருந்து திரும்பிய உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார். தேர்தல் பிரச்சாரத்தற்காக பிரதமர் உத்தரப்பிரதேசம் சென்றிருந்த நிலையில், தனது சொந்த தொகுதியான வாரணாசியில், மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் சிக்கித் தவித்த போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மாணவர்கள் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். Source link