கர்நாடகாவை சேர்ந்த 550 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவிப்பு- மாணவருடன் வளர்ப்பு நாயையும் மீட்க ஏற்பாடு

பெங்களூரு: உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பல்வேறு கட்டங்களாக இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் கர்நாடகாவை சேர்ந்த 694 மாணவர்கள் மருத்துவம் மற்றும் இதர படிப்புகள் படித்து வருகின்றனர். போர் தொடங்கும் முன்பாக அவர்களில் 57 பேர் கர்நாடகாவுக்கு திரும்பினர். கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் நேற்றுவரை 86 மாணவர்கள் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் … Read more

இந்தியாவை சுயசார்பு அடிப்படையில் உலகத்திற்கான சந்தையாக மாற்றுவதே நோக்‍கம்!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவை சுயசார்பு அடைப்படையில் உலகத்திற்கான சந்தையாக மாற்றுவதே நோக்‍கம் என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் உற்பத்தியாளர்கள் உலக அளவிலான தரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட்டிற்கு பிறகு, ‘உலகத்திற்காக மேக் இன் இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் கவனம் செலுத்துவதுடன், தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு … Read more

'உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும்' – பிரதமர் மோடி

தீபாவளியன்று, மட்கலங்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதாக ஆகாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய, இணையதளத்தில் ‘மேக் இன் இந்தியா ஃபார் தி வேர்ல்ட்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அப்போது உரை நிகழ்த்திய அவர், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆராய்ச்சி அடிப்படையிலான எதிர்கால அணுகுமுறை தேவை என்றும், அதற்கு நாம் பெரிய அளவில் சிந்திக்க வேண்டும் … Read more

காப்பீட்டு சான்றிதழ் சரிபார்ப்பு; செல்போன் எண் கட்டாயம்: புதிய அறிவிப்பு வெளியீடு

புதுடெல்லி: சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாலை விபத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப் படுகிறது. சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் அளிப்பது, வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், இழப்பீடு கோரிக்கைகளுக்கு … Read more

நான் வேணும்னா.. போரை நிறுத்துமாறு புடினிடம் சொல்லவா?.. கடுப்பான தலைமை நீதிபதி!

உக்ரைன் மீதான ரஷ்யப் போரை நிறுத்த தலைமை நீதிபதி என்ன செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் கேட்கிறார்கள். நான் வேண்டும் என்றால் போரை நிறுத்துமாறு புடினிடம் போய் சொல்லட்டுமா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுள்ளார். உக்ரைன் எல்லைப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதின்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹீமா … Read more

குவாட் அமைப்பின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை <!– குவாட் அமைப்பின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை –>

குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் காணொலி வாயிலாக இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 4 நாடுகளின் தலைவர்களும் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைன் விவகாரத்தை மையமாக வைத்தே இவர்களது உரையாடல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாட் கூட்டணியில் உள்ள நாடுகளில் இந்தியா மட்டுமே உக்ரைன் – … Read more

அருமையான கூட்டம்: ஜெய்சங்கர் தலைமையிலான ஆலோசனை குறித்து சசி தரூர் கருத்து

உக்ரைன் மீது ரஷியா கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 8-வது நாளாக தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களை பிடிக்க ஆக்ரோசமாக தாக்குதல் நடத்தி வருவதால் கார்கிவ், கீவ் நகரில் உள்ள இந்தியர்கள், மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் இந்திய அரசு பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய மாணவர் ஒருவர் கார்கிவில் நடைபெற்ற … Read more

உக்ரைன் உடன் இன்று கட்டாயம் பேச்சுவார்த்தை நடைபெறும்.: ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்

ரஷ்யா: உக்ரைன் உடன் இன்று கட்டாயம் பேச்சுவார்த்தை நடைபெறும் என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் தப்பிச்செல்ல அந்நாட்டு அரசு மறுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. 

நாம் அவர்களிடம் போரை நிறுத்தச் சொல்ல முடியுமா? – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கேட்க முடியுமா? என்று உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார் இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, “இந்த விஷயத்தில் நாம் என்ன செய்ய முடியும்? நாளை புடினுக்கு உத்தரவு பிறப்பிக்கச் சொல்வீர்களா…நாம் அவர்களிடம் போரை நிறுத்தச் சொல்ல முடியுமா? மாணவர்கள் மீது எங்களுக்கு முழு அனுதாபமும், அக்கறையும் உள்ளது. … Read more

பங்கரில் பதுங்கினோம்… – கீவ் யுத்தக் களத்தில் இருந்து தப்பி டெல்லி வந்த மாணவர்களிடம் அகலாத அச்சம் | மீட்புப்பணியில் 3 போர் விமானங்கள்

புதுடெல்லி: உக்ரைன் தலைநகர் கீவ் போர்க்களத்திலிருந்து தப்பி வந்த இந்திய மாணவர்கள் பலரும் பீதியுணர்வில் உறைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் சி-17 குளோப் மாஸ்டர் வகை இந்திய போர் விமானங்கள் மூன்றும் களம் இறக்கப்பட்டுள்ளன. ரஷ்யா தொடுத்த போரினால் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களுக்கும் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் துவக்கப்பட்ட ’ஆப்ரேஷன் கங்கா’ மீட்புப் பணியில் தற்போது போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று காலை டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்திற்கு … Read more