காலாவதி தேதியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி மருந்தை மாற்றிக் கொடுக்க மாநில அரசுகளுக்கு தடையில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: காலாவதி தேதியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி மருந்தை மாற்றிக் கொடுக்க மாநில அரசுகளுக்கு தடையில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி மருந்து காலாவதி தேதியை நெருங்கியதால் ஒன்றிய சுகாதாரத்துறை இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

"இந்தியர்களை மீட்க என்னென்ன திட்டங்கள்?" – ராகுல்காந்தி வலியுறுத்தல்

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பான திட்ட விவரங்களை மத்திய அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ராகுல், மேலும் சோகம் நிகழ்வதைத் தவிர்க்க மீட்பு குறித்த தகவல்களை பகிர்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். உக்ரைனிலிருந்து எத்தனை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர், இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், பகுதிவாரியாக அவர்களை வெளியேற்ற அரசிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன? என்பன போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். … Read more

'இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை': வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் அங்குள்ள நமது தூதரகம் தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் உதவியுடன் நேற்று நிறைய இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறினர். இதுவரை இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு எந்தத் … Read more

உத்தரப் பிரதேசத்தில் 6வது கட்டமாக 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு <!– உத்தரப் பிரதேசத்தில் 6வது கட்டமாக 57 தொகுதிகளில் வாக்குப்… –>

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் உள்பட 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 11 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர் இரண்டு கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 676 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். எஞ்சிய 54 தொகுதிகளுக்கான ஏழாம் கட்ட இறுதித் தேர்தல் இம்மாதம் … Read more

உக்ரைனுக்கு 2 டன் மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தது

புதுடெல்லி: போரில் சிக்கி தவிக்கும் உக்ரைன், மனிதாபிமான உதவி அளிக்குமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. அதை ஏற்று, இந்தியா முதல்கட்ட மனிதாபிமான உதவி பொருட்களை நேற்று அனுப்பி வைத்தது. 2 டன் மருந்துகள் மற்றும் முக கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், குளிரை தாங்கும் ஆடைகள், கூடாரங்கள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், பாய்கள், சோலார் விளக்குகள் ஆகியவற்றை தேசிய பேரிடர் மீட்பு பணி உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பொருட்களுடன் நேற்று டெல்லியில் இருந்து 2 விமானங்கள் … Read more

உ.பி.யில் 6ம் கட்ட வாக்குப்பதிவு …80%-த்திற்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிபெறும் : வாக்களித்த பின் யோகி ஆதித்யநாத் உறுதி!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில்  இதுவரை 5கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. குறிப்பாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியிலும், மாநில காங்கிரஸ் அஜய் குமார் லல்லு போட்டியிடும் தம் காஷி ராஜன் தொகுதி ஆகிய தொகுதிகளில் தேர்தல் இன்று நடக்கிறது. இன்று நடக்கும் தேர்தலில் மொத்தம் 676 … Read more

இந்தியர் அனைவரும் மீட்கப்படுவார்கள்: உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. நேற்று வரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உ.பி.யின் சோன்பத்ராவில் நடைபெற்ற தேர்தல் … Read more

குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு உக்ரைன் இரங்கல் <!– குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும… –>

கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினரின் குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய ஐ.நா-வுக்கான உக்ரைன் தூதர் Sergiy Kyslytsya, தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது என்றும் இந்தியாவிற்க்கும், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார். Source link

உத்தர பிரதேசத்தில் இன்று 6-ஆம் கட்ட தேர்தல்: 57 தொகுதிகளில் நடை பெறுகிறது

பல்ராம்பூர்: உத்தர பிரதேச சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. 6ம் கட்ட தேர்தல்  10 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது. அம்பேத்கர்நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று நடைபெறும் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர்  … Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான … Read more