ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினை ஆக்காதீர்: அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. … Read more

பிரதமர் என்றும் பாராமல்… காங்கிரஸ் கடும் தாக்கு!

நாடாளுமன்றத்தின் நேரத்தை பிரதமர் நரேந்திர மோடி வீணடித்து விட்டதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் … Read more

நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்த போதே கோவாவை விடுவித்திருக்கலாம் – பிரதமர் மோடி <!– நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்த போதே கோவாவை விடு… –>

நேரு நினைத்திருந்தால், 1947-ல் சுதந்திரம் கிடைத்த போதே, போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுவித்திருக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வருகிற 14ஆம் தேதி, கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி, அம்மாநிலத்தின் மப்பூசா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, நேரு நினைத்திருந்தால் நாடு சுதந்திரம் அடைந்த சில மணி நேரங்களிலேயே கோவாவை விடுவித்திருக்கலாம் எனவும், ஆனால், போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுக்க, சுதந்திரத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் ஆனது … Read more

கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி

பனாஜி: 40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.க. சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க காங்கிரஸ் அரசு 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என தெரிவித்தார். இந்நிலையில், கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி … Read more

சிறுவயது முதலே மலைஏற்றத்தில் ஆர்வம்; பாலக்காடு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பிய இளைஞர் பாபு பேட்டி

பாலக்காடு: கேரளாவில் மலையில் சிக்கி தவித்து பின்னர் மீட்கப்பட்ட பாபு மருத்துவமனையில் சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் மலையேற்றத்தின் போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய பாபு, 45 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாபுவின் உடல்நலம் தேறியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவயது முதலே … Read more

இந்தியா முதலில் பேட்டிங்: இன்றையப் போட்டியில் அணியில் 3 மாற்றங்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான … Read more

ஹிஜாப் விவகாரம் | 'எங்கள் மகள்களின் போன் நம்பரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்' – பெற்றோர் புகார்

பெங்களூரு: ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த கர்நாடக மாணவிகளின் தனிப்பட்ட செல்போன் எண்களை பொதுவெளியில் சிலர் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அம்மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். உடுப்பி மாவட்ட காவல் கண்காளிப்பர் என்.விஷ்ணுவர்த்தனை சந்தித்த மாணவிகளின் பெற்றோர், ”எங்கள் பிள்ளைகளின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இதனை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர். இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய காவல் துறை, உரிய … Read more

அரசு ஊழியர்கள் செம ஹேப்பி – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 700 அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையை, முதலமைச்சர் வழங்கி உள்ளார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று தான், ஒப்பந்த அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது. இந்நிலையில், டெல்லி நீர்வளத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து … Read more

7 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– 7 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி – நிதியமைச்சர… –>

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், நேரடி அந்நிய முதலீடும் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பட்ஜெட் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். பிஎம் கதி சக்தித் திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இதுவரை இல்லா வகையில் செலவிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார். வேளாண்மையில் டிரோன்களின் பயன்பாட்டால் உரங்கள் பூச்சிக்கொல்லிகளைத் திறமையாகப் பயன்படுத்தவும், பயிரிடும் பரப்பு, விளைச்சல் ஆகியவற்றை … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் திறக்கப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோவிலுக்கு … Read more