ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய ராணுவத்தினர் தீவிரம் <!– ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கித… –>

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பனியில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர். இடைவிடாது பெய்து வரும் பனிப்பொழிவால் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில், சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பனிமூடிய சாலைகளுக்கு மத்தியில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் நவ்யுக் சுரங்கப்பாதையில் சிக்கியது. பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை போலீசார் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.   Source link

பிட்காயின்ஸ் மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்

கெயின்பிட்காயின் ஊழல் வழக்கில் பரத்வாஜ் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்த ஊழல் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அஜரான கூடுதல் சொலிசிட்டி ஜெனரல் பாதி, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். அப்போது, பிட்காயின்ஸ் சட்ட விரோதமா? இல்லையா? என கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி?

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவின் தலைநகர் புக்ரெஸ்ட் வழியாக இந்தியர்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் எஸ்டிபிஐ, பிஎப்ஐ-க்கு தடை கோரி போராட்டம்

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப் பட்டார். இதன் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினர் இருப்பதாக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் எஸ்டிபிஐ, பிஎப்ஐ ஆகிய‌ அமைப்பினர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். … Read more

இந்தியாவில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 13 ஆயிரத்து 166 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 302 பேர் உயிரிழந்த நிலையில், 26 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 28 சதவீதமாக உள்ளதுடன், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 235 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

ஜம்மு காஷ்மீர் – சோபியான் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று தகவல் கிடைத்தது.  இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையும் படியுங்கள்…வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள … Read more

நகர்ப்புற தேர்தலில் வென்ற காங். நிர்வாகிகளுடன் பிப்.28ல் சென்னையில் ராகுல் காந்தி ஆலோசனை..!!

டெல்லி: நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28ல் சென்னையில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வரும் ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஆலோசனையில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் இரண்டரை மடங்கு அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

‘ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர்’ என்ற தலைப்பில் வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு, ‘பி.எம்.கிஸான் சம்மான் நிதி’ திட்டம் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் இதே நாளில் தொடங்கப்பட்டது. இதில் விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்குரூ.2 … Read more

NSE முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் கைது; சிபிஐ அதிரடி!

என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் முகம் தெரியாத சாமியார் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை என்.எஸ்.இ-ன் ஆலோசகராக நியமித்ததாக கூறப்படுகிறது. அதுவும் இந்த பணியிடத்தை நிரப்ப எந்தவித விளம்பரமும் செய்யாமல் வெறும் ஆனந்த் சுப்பிரமணியனை மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருக்கிறார். இந்நிலையில் சித்ரா மற்றும் ஆனந்த் ஆகியோர் இணைந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முகம் … Read more

200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரம் <!– 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது சிறுவனை… –>

மத்திய பிரதேச மாநிலம் உமாரியாவில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்தனர். பதார்ச்சத் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயதே ஆன சிறுவன், அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். கிணற்றில் 40 அடியில் சிக்கியுள்ள சிறுவனுக்கு ஆழ்துளைக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மாவட்ட அதிகாரிகள் உள்பட பலரும் குழந்தையை … Read more