அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதரத் தடைகள் விதிப்பு <!– அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான… –>

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதரத் தடைகளை அறிவித்துள்ளன. ரஷ்யாவின் 6 நிதி அமைப்புகள் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது. ரஷ்யா தனது ராணுவத்துக்கு நிதியை வழங்கமுடியாதபடியும் அதன் யூரோ மற்றும் பவுண்டு வர்த்தகம் முடக்கப்பட்டு டாலரை சார்ந்து நிற்கும் நிலை ஏற்படும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதே போல் பிரிட்டனும் ரஷ்யாவின் 5 வங்கிகளுக்கு தடை அறிவித்துள்ளது.ஐரோப்பிய யூனியனும் பொருளாதாரத் தடைகளைஅறிவித்து ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களை ரத்து … Read more

வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை

கொல்கத்தா : மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிழை ஏற்பட்டதன்படியே பகல் 2 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2 மணிக்கு சட்டசபை கூட்டத்தை நடத்த கவர்னர் ஜக்தீப் தன்கார் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மார்ச் 7-ந் தேதி நள்ளிரவில் சட்டசபை கூட்டம் ஆரம்பிக்க உள்ளது. சட்டசபை கூட்டம் தொடர்பாக கவர்னருக்கு மாநில அரசால் அனுப்பட்ட பரிந்துரை … Read more

எம்எல்ஏ.க்களுக்கு ஐபோன் இலவசம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நேற்று முன்தினம் இதன் சட்டப்பேரவையில் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அனைத்து எம்எல்ஏ.க்களுக்கும் ஒரு சூட்கேசுடன் ஐபோன்-13 பரிசாக வழங்கப்பட்ட இதன் விலை ரூ.70 ஆயிரம். 200 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏக்கள் 71 பேர் உள்ளனர். இந்நிலையில், அரசு பரிசாக வழங்கியுள்ள ஐபோனை திருப்பி கொடுக்க பாஜ எம்எல்ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.

'உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்'- ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறி வந்த நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மிக ஆக்ரோஷமான போரை தொடங்கியிருக்கிறது ரஷ்யா. முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய போர் … Read more

ரஷ்யா-உக்ரைன் விவகாரம்- பாதுகாப்பு அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் அமைச்சரவைக் குழுவில் இடம்பெறாத போதிலும் அவர்களும் இக்கூட்டத்தில் … Read more

புதினிடம் பேசி போரை நிறுத்தச் சொல்லுங்கள்… மோடிக்கு உக்ரைன் தூதர் வேண்டுகோள்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால், பொதுமக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் … Read more

நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும்: பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்ற தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்த … Read more

மாணவிகள், பெற்றோர் போராட்டத்தின் பின்னணி; ஹிஜாப் விவகாரத்தில் சிஎப்ஐ தலையீடு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி தரப்பு தகவல்

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் சிஎப்ஐ அமைப்பினர் தலையிட்ட பிறகே முஸ்லிம் மாணவிகள் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பு கர் நாடகஉயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனிடையே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருக்க அறிவுறுத்தல் – இந்திய தூதரகம் <!– உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் பதுங்கு குழிக்குள் பதுங… –>

உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் போர் விமானங்கள் மற்றும் குண்டு சத்தத்தை கேட்டால், உடனடியாக பதுங்குக் குழிகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவற்றில் பதுங்கியிருக்குமாறும், பதுங்கு குழிகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, உக்ரைன் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், இந்தியர்கள் மீட்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை பத்திரமாக மீட்க வேறு ஏதேனும் வழிகள் இருக்கிறதா எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளாக … Read more

உக்ரைனில் 74 ராணுவ இலக்குகளை குண்டு வீசி அழித்தது ரஷியா

ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. இதில், உக்ரைனில் உள்ள 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ இலக்குகளை அழித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்பு … Read more