தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க புதிய செயலி அறிமுகம் – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடுகளை களையும் வகையில் குறை தீர்ப்பு செயலியை மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி கிரிராஜ் சிங் நேற்று தொடக்கி வைத்தார். இதற்கான  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பல தரப்பிலிருந்து பெறப்படும் புகார்களை எளிதாக வகைப்படுத்தி தெரிவிக்கும் வகையில், இந்த குறை தீர்ப்பு செயலியை ஊரக மேம்பாட்டு … Read more

குடும்பத்தை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டால் ரூ.10 கோடி நஷ்டஈடு: நடிகர் ஆவேசம்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு மகள் லட்சுமி மன்சு, மகன்கள் விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு உள்ளனர். இவர்கள் அனைவரும் தெலுங்கு உள்பட சில மொழிகளில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன் பாபு நடித்த சன் ஆஃப் இந்தியா என்ற படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை இணையதளங்களில் தாறுமாறாக விமர்சனம் செய்து மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்தனர். இதனால் ஆவேசம் அடைந்த விஷ்ணு மன்சு, ‘ரசிக்கக்கூடிய சில மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக்கொள்வோம். ஆனால், எங்கள் குடும்பத்தை பற்றி … Read more

தமிழகத்தை ஆளமுடியாதா? – ராகுல் காந்திக்கு பாஜக பதில்

புதுடெல்லி: தமிழகத்தை பாஜக ஆளமுடியாது என்று ராகுல்காந்தி கூறியது தவறு என்று பாஜக கூறியுள்ளது. தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிகமான வார்டுகளை பாஜக வென்றுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘தமி ழகத்தை பாஜக ஒரு காலத்திலும் ஆள முடியாது’ என்று குறிப் பிட்டிருந்தார். ஆனால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ள நிலையில், … Read more

"ஹிஜாப் விவகாரம்.. ஷிமோகா கொலை".. இந்து ஓட்டுக்களைக் குறி வைக்கும் பாஜக!

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை “இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும்” முயற்சியாக அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள். பாஜக இந்த இரு பிரச்சினைகளையும் முன்வைத்தே எதிர் வரும் 2023 சட்டசபைத் தேர்தலை சந்திக்கத் தயாராகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் கர்நாடகத்தை இரண்டு சம்பவங்கள் உலுக்கிப் போட்டன. ஒன்று, உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம். இந்த தடைக்கு எதிராக முதலில்அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் போராடினர். ஆனால் ஹிஜாப் தடை மெல்ல மெல்ல … Read more

லாக்கருடன் பணம், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் ; சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞர்களை கைது செய்த போலீசார் <!– லாக்கருடன் பணம், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் ; சிச… –>

தெலங்கானாவில் தனியார் நிதி நிறுவனத்தில் லாக்கரை உடைக்க முயன்ற கொள்ளையர்கள், அது முடியாததால் 14 லட்சம் பணம், 20 சவரன் நகைகளோடு லாக்கரையும் சேர்த்து தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கரீம் நகரில் இயங்கி வரும் இந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 21ம் தேதி வழக்கம் போல அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் காலை வந்து பார்க்கையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் திருடப்பட்டதாக போலீசில் புகாரளித்தனர். சிசிடிவி … Read more

ரஷியா மீதான எந்தவொரு தடையும், இந்தியாவுடனான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் குறித்து,  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் உள்ளிட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த அவசர கூட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் … Read more

இந்திய மாணவர்கள் 20,000 பேர் தவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20 ஆயிரம் பேர், உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5 ஆயிரம் பேர் உள்ளனர். உக்ரைனை போர் மேகம் சூழ்ந்ததும், இவர்களை உடனடியாக நாடு திரும்பும்படி ஒன்றிய அரசு பலமுறை வலியுறுத்தியது. ஆனால், அங்கு நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்று கூறி, பெரும்பாலான மாணவர்கள் நாடு திரும்பவில்லை. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் ஒன்றிய அரசு இயக்கிய … Read more

திருப்பதியில் இலவச டிக்கெட் கிடைத்தும் சுவாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் சர்வ தரிசன டிக்கெட்டுகளை வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வாங்கி விடுகின்றனர். ஆனால், அவர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. திருப்பதியில் 3 அல்லது 4 நாட்கள் வரை தங்குவதற்கும், ஓட்டல்களில் உணவு உண்ப தற்குமே கொண்டு வந்த பணம் கரைந்து விடுகிறது. இதனால், பலர் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், அல்லது நிவாசம், கோவிந்தராஜர் சத்திரம் ஆகிய … Read more

இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்: உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது!

உக்ரைன் ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. முன்னதாக, உக்ரைனில் உள்ள தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தது. அந்த வகையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு, வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, அதிகரித்து வரும் போர் பதற்ற சூழல் காரணமாக … Read more

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு <!– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு –>

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு? ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று இரவு பேச இருப்பதாக தகவல் புதினுடன் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் புதினுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வலியுறுத்தி இருந்தார் Source link